அசோகன்குறிஞ்சி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அசோகன்குறிஞ்சி
இடம்:  தர்மபுரி -சாலூர்
பிறந்த தேதி :  20-Mar-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jul-2013
பார்த்தவர்கள்:  204
புள்ளி:  98

என்னைப் பற்றி...

என்னைப்பற்றி
விழுந்த குழந்தை அழுவதில்லை
யாரும் பார்க்காத நேரத்தில்
நான் என் மனதை
ஒளியாக்கிக்கொண்டதனால்
மாற்றான் மனதுக்கு
வெள்ளையடிக்க விரும்பாதவன்
பழி சொற்களை உண்டே
பசியாறியவன்
இழிவுபடுத்தியோரை
தெளிவு படுத்த நேரமில்லை
ஏளனம் செய்தோருக்கு
காரணம் தேடவில்லை
செவிகளிரண்டையும் செவிடாக்கி
சிகரம்நோக்கினேன்
இடறி விழுந்தபோதும்
எனது கையே ஊன்றுகோல்
ஏளனச்சொற்களை
என்னை வாழ்த்தும்
தோரண சொற்களாக்கினேன்
பழி சொற்களை
எனைப்பார்க்கும்
விளிச்சொற்களாக்கினேன்
எறும்பொப்ப முயற்சி
இரும்பொப்ப உறுதி
நாயொப்ப நன்றி
தாயொப்ப பாசம்
தீயொப்ப கோபம்
சேயொப்ப உள்ளம்
இதுவே என் தோற்றம்
இதுவே என் ஏற்றம் ...

என் படைப்புகள்
அசோகன்குறிஞ்சி செய்திகள்
அசோகன்குறிஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2020 2:05 pm

ஓவ்வொரு நொடியும் அதிர்ந்து போகிறதுஉயிர்ப்பூக்கள் வொவ்வொன்றாய் உதிர்ந்துபோகிறதுகாலத்தின் நகர்வுகள் கழிந்துபோகிறது

மேலும்

அசோகன்குறிஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2019 1:50 pm

கடந்துதான் போகிறேன்
-----------------------------------
நடக்கும் வழியெங்கும்
நான்மட்டுமல்ல
என்னைப் போல்
எத்தனையோ உயிரினங்கள்
நகர்ந்து கொண்டுதானிருக்கின்றன
எனக்குத் தேவையற்றவை
என்பதாலோ அவற்றைக் கண்டுகொள்ளாமல்
கடந்துதான் போகிறேன்..!
படித்த மேதையென்றேபலரும்
தன்னை மெச்சிக்கொண்டு
நடித்தே வாழ்ழுகின்ற
நாகரீகக்கூட்டம் கண்டும்
கடந்துதான் போகின்றேன்..!
கல்வியிலே தன்னிறைவாம்
காது புளிக்கிறது
வாழ்க்கையைப் படித்தோரை
வழிநெடுகிலும் தேடினேன்
ஒருவரையும் காணவில்லை
கடந்துதான் போகிறேன்..
தாங்கிச் சுமக்கும் பாவத்திற்காக
பூமியின்மீது மலமும் மூத்திரமும்
மட்டுமன்றி காறியுமிழ்ந்த கோழையாலும்

மேலும்

அசோகன்குறிஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2019 3:25 pm

சைகைமொழி மாற்றம்கண்டு சங்கம்வைத்து ஆய்ந்தவளாம்
பொய்கையிலே எறிந்தபின்னும் புனலாடி மீண்டவளாம்
வைகையாற்றுப் படுகையிலே வளம்கொழித்துச் சிறந்தவளாம்
வையகத்து மொழிகளுக்கு மூத்தவளாய்ப் பிறந்தவளாம்..!

மூடிமறைத்தாலும் முட்டியெழும் வித்தினைப்போல்
ஆழிவந்து அழித்தபின்னும் அவதரித்து வந்த தமிழ்
நாழிக்கணக்கறிந்து நற்காற்றுதிசையறிந்து
ஆழிசூழ் உலகமெலாம் அடிவைத்து ஆண்ட தமிழ்

ஏற்றமிகு எண்ணமைத்து இலக்கணமும் வகுத்தளித்து
மாற்றம்பல கண்டபின்னும் மங்கிடாத கன்னித் தமிழ்
காற்றடித்தால் கலைந்துபோக தமிழ் கார்மேக கூட்டமல்ல புவி
ஆற்றலையே ஆய்ந்தறிந்து அறிவியலைக் கண்ட தமிழ்

ஆய்தறியாத் துறையுமில்லை தமிழ் அறிவியலில் குறையுமில்

மேலும்

பிழைகள் உள்ளது 31-Oct-2019 7:13 pm
சைகை இல்லை மறைமுகம் தோழா 31-Oct-2019 7:06 pm
மிகவும் நன்றாக இருக்கிறது, எனக்கு பிடித்திருக்கிறது புரிந்தும் இருக்கிறது ஆனால் உங்களின் பாட்டு இன்றைய தமிழ் மக்களின் மனதை தொட சற்று வார்த்தைகளை எளிமைப்படுத்தி எழுதினால் இன்னும் நலமாயிருக்கும். உங்களின் நல்ல பாட்டிற்கு என் வாழ்த்துக்கள். 19-Oct-2019 5:45 pm
அசோகன்குறிஞ்சி அளித்த நூலை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Aug-2019 9:39 pm

வெ.முனீஷின் சுயம்பு கவிதை நூல் விமர்சனம்.
;
-------------------

தமிழில் எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும் " சுயம்பு "என்ற இவ்வார்த்தைக்கு மட்டும்தனித்துவமான ஒரு "தன் நிலை" உண்டு. அத் தன்னிலையை தன்னகத்தே கொண்டு வெளிவந்துள்ள இந்த சுயம்பு சற்று அல்ல மிகப்பெரியதொரு மாறுபட்ட படைப்பு.

"மாறுபட்ட படைப்பு என்று சொல்வது கூட இத்தொகுப்பிற்கு பொருத்தமானதே! ஏனெனில் ஆண் பெண் படைப்புகளிலிருந்து மாறுபட்ட "அரவாணியர்கள்"படைப்பைப் பற்றிப் இத்தொகுப்பு கவிதைகள் முழுவதும் பேசுவதால் "மாறுபட்ட" என்ற வார்த்தை "இரு" வகையிலும் பொருத்தமான "ஒன்றே".இத்தொகுப்பிலுள்ள கவ

மேலும்

அசோகன்குறிஞ்சி - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
26-Aug-2019 9:39 pm

வெ.முனீஷின் சுயம்பு கவிதை நூல் விமர்சனம்.
;
-------------------

தமிழில் எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும் " சுயம்பு "என்ற இவ்வார்த்தைக்கு மட்டும்தனித்துவமான ஒரு "தன் நிலை" உண்டு. அத் தன்னிலையை தன்னகத்தே கொண்டு வெளிவந்துள்ள இந்த சுயம்பு சற்று அல்ல மிகப்பெரியதொரு மாறுபட்ட படைப்பு.

"மாறுபட்ட படைப்பு என்று சொல்வது கூட இத்தொகுப்பிற்கு பொருத்தமானதே! ஏனெனில் ஆண் பெண் படைப்புகளிலிருந்து மாறுபட்ட "அரவாணியர்கள்"படைப்பைப் பற்றிப் இத்தொகுப்பு கவிதைகள் முழுவதும் பேசுவதால் "மாறுபட்ட" என்ற வார்த்தை "இரு" வகையிலும் பொருத்தமான "ஒன்றே".இத்தொகுப்பிலுள்ள கவ

மேலும்

அசோகன்குறிஞ்சி அளித்த படைப்பில் (public) SHAN PAZHANI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2018 3:28 pm

விருப்பத்தோடு
தரும்போது
விஷமும் அமுதாகும்
உண்மையான
நேசத்தில்.!

மேலும்

மிக யதார்த்தமான வரி 02-Jul-2018 3:25 pm
நன்றி 02-Jul-2018 12:10 pm
நெறியான அன்பு மரணத்தை தாண்டிப் பாயும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:09 pm
அசோகன்குறிஞ்சி - அசோகன்குறிஞ்சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2018 3:58 pm

விழுந்த குழந்தை அழுவதில்லை
யாரும் பார்க்காத நேரத்தில்
நான் என் மனதை
ஒளியாக்கிக்கொண்டதனால்
மாற்றான் மனதுக்கு
வெள்ளையடிக்க விரும்பாதவன்
பழி சொற்களை உண்டே
பசியாறியவன்rன்
இழிவுபடுத்தியோரை
தெளிவு படுத்த நேரமில்லை
ஏளனம் செய்தோருக்கு
காரணம் தேடவில்லை
செவிகளிரண்டையும் செவிடாக்கி
சிகரம்நோக்கினேன்
இடறி விழுந்தபோதும்
எனது கையே ஊன்றுகோல்
ஏளனச்சொற்களை
என்னை வாழ்த்தும்
தோரண சொற்களாக்கினேன்
பழி சொற்களை
எனைப்பார்க்கும்
விளிச்சொற்களாக்கினேன்
எறும்பொப்ப முயற்சி
இரும்பொப்ப உறுதி
நாயொப்ப நன்றி
தாயொப்ப பாசம்
தீயொப்ப கோபம்
சேயொப்ப உள்ளம்
இதுவே என் தோற்றம்
இதுவே என்

மேலும்

நெறியான எண்ணங்கள் உள்ள வரை வாழ்க்கை வழிதப்பாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:18 pm
அசோகன்குறிஞ்சி - அசோகன்குறிஞ்சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2018 3:41 pm

உன்
நினைவுகள்
என்னை நனைக்கும்போது
சுட்டெரிக்க
சூரியனுக்கும் சக்தியில்லை

மேலும்

கடைசியில் பிரியர்கள் பிரிவை சந்திக்கும் போது மரணம் கூட விரைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:14 pm
அசோகன்குறிஞ்சி - அசோகன்குறிஞ்சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2018 3:37 pm

ஆறுதல் சொல்ல
உறவுகள் இருந்தால்
அழுவது கூட
ஆனந்தமே ...!

மேலும்

ஆறுதல்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் காயப்பட்ட நெஞ்சின் மாறுதல்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:13 pm
அசோகன்குறிஞ்சி - அசோகன்குறிஞ்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2018 9:59 pm

சுயநலத்துக்குப் போராடவில்லை
சுவாசத்திற்குப் போராடினாய்
உன்வாழ்க்கைக்குப் போராடவில்லை
உயிர்வாழப் போராடினாய்
நயவஞ்சக நரிக்கூட்டங்கள்
சாதியாலும் இனத்தாலும் மதத்தாலும்
தரம்பிரித்துச்சூழ்ச்சி செய்து
வேட்டையாடிப் பிழைக்கிறது
பிணங்களைத் தின்றவாறே..!
உன் வியர்வை உணவாச்சு
உன் உழைப்பு உடையாச்சு
உன் குருதியை உறிஞ்சிக்குடித்தது
உடல் வளர்த்த ஓநாய்கள்
நெஞ்சினில் சுடச்செய்து
நீதியைக் கொளுத்தியதோ
ஒட்டுப் போட்டு ஆளச்செய்தாய் உனை
வேட்டுப்போட்டு சாகச்செய்தான்
நீ செய்துவிட்டக் குற்றமென்ன
கொள்ளையடித்தாயா
கொலைக்களவு புரிந்தாயா
மல்லய்யா போல் கடன்வாங்கி
மருதேசம் போனாயா..
இல்லை

மேலும்

thanks 27-May-2018 10:18 pm
தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம் 26-May-2018 1:33 pm
அசோகன்குறிஞ்சி - அசோகன்குறிஞ்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2018 6:25 pm

சேருங்கள் சிங்கங்களே
செந்தமிழ்ச் சொந்தங்களே
பாரததேசத்திலே-தமிழன்
வாழ்ந்திட வக்கில்லையா
பாராண்ட நம்குலத்தோர்-சென்று
சேர்ந்திட திக்கில்லையா
தட்டிடத் தட்டிடத்திறக்கும்-எனும்
தத்துவம் தேவையில்லை
முட்டிடமுட்டிட முளைக்கும்-புதுப்
புரட்சி வேண்டுமிங்கே....
எலும்புத்துண்டுக்கு வாலாட்டும்இந்த
எச்சில் நாய்களை நம்பிநம்பி
தழும்புகண்டாய் நெஞ்சினிலே -இனி
தாமதம் கொள்ளாதே தம்பிதம்பி
பிணமாக நேர்ந்திடினும்
இனம்வாழப் போராடி உன்
நெஞ்சினில் ஏந்தினாய் தோட்டாக்களை

மேலும்

நன்றி 25-May-2018 10:08 pm
உங்கள் முழக்கத்தில் ஒரு ஆதித்தமிழனின் கர்ஜனை காண்கிறோம்..... மீண்டு எழுவோம் உறவே இமையமாய் 24-May-2018 6:03 pm
அசோகன்குறிஞ்சி - அசோகன்குறிஞ்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2017 10:09 pm

அதிகாலைத் துயில் எழுந்து
அவளை தரிசிக்க காத்திருந்தேன்
என் விழிகளுக்கு விருந்தாக
வெளியே வந்தவள்
ஏங்கி கிடைக்கும் பார்வை
பசியாலே தவிக்கவிட்டு
அரிசி மாவால் கோலம் போட்டாள்
எறும்புகள் பசியாற !

மேலும்

நன்றி 07-Apr-2017 6:33 pm
எறும்பிடம் காட்டும் அன்பு கூட காதலனுக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் வானும் அழுகிறது 07-Apr-2017 11:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (46)

சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை
சிவா

சிவா

Malaysia
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (46)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .
மேலே