அ பெரியண்ணன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அ பெரியண்ணன்
இடம்:  தருமபுரி,காமலாபுரம்
பிறந்த தேதி :  19-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Mar-2013
பார்த்தவர்கள்:  611
புள்ளி:  152

என்னைப் பற்றி...

வாழ்வின் பொருள் கோடி வையம் தேடி

அலையும் மனிதம் மறந்த மானிட

மனிதமே நீ தேடும் மார்கமென அறிவாய்...

என் படைப்புகள்
அ பெரியண்ணன் செய்திகள்
அ பெரியண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2020 12:25 pm

"அவள் மேல்பார்வை முறைப்பினில் மொத்த கர்வமும் போயின"-நான் மீளாமல் போனேன் அன்று முதலாய் ...!

மேலும்

அ பெரியண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2018 11:22 am

"தீதுண்டோ தீதின்றி, தீதோன்றுமில்லை தீது யாதும் உணராது"

மேலும்

அ பெரியண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2018 2:00 pm

உற்று நோக்கினும்
உண்மை இல்லையே_எனும்
நித்தம் நிஜம் தேடல்
புரை கண்ணுக்கு_யாவும்
உண்மை பொய்மையாய்...

மேலும்

அ பெரியண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2018 11:59 am

அனைவரும் நலமா?...என் தோழன்,தோழிகளே?...

மேலும்

நலம், நீங்கள் நலமா? 09-Jun-2018 7:27 pm
அ பெரியண்ணன் - அ பெரியண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2018 3:45 pm

யாழ் செல்லம்மா...

செல்லமடி நீ எனக்கு

என் தங்கை தேவதை

நான் கண்டு எடுத்த முத்தும்

என் யாழ் செல்லம்மா...

கள்ளம் இல்லாதவ

கோவம் கொல்லாதவ

என் யாழ் சிரிக்கும் போது

வெள்ளி நிலா தோற்று போகும் அழகுல...

கடவுள் நூறு வரம் கொடுத்தாலும்

நீ கொடுத்த உறவுக்கு ஈடு இல்லையாடா...

நான் கோவ படும்போதெல்லாம்

அண்ணானு நீ சினுங்க

என் கோவம் தோற்று போனதுதான் மிச்சம்...

செல்லமடி நீ எனக்கு

என் தங்கை தேவதை

நான் கண்டு எடுத்த முத்தும்
என் யாழ் செல்லம்மா...

நீ புலம்பினாலே

என் மனசு தாங்கல...

உன் அழுகாட்சிய
நான் காண நேர்ந்தால்

என் மனம் வெந்தே சாகுமடி...

உன் கண்ணகுழி

மேலும்

நன்றி தம்பி... 21-Jan-2018 3:07 pm
நன்றி நட்பு... 21-Jan-2018 3:07 pm
ஒவ்வொரு அண்ணனும் தங்கையின் வரவால் இன்னுமோர் அன்னையாகிறான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 7:36 pm
எழுத்து தளத்தில் கண்டதும் மிக்க மகிழ்ச்சி ....கவி மிக அருமை.... 20-Jan-2018 5:39 pm
அ பெரியண்ணன் - பெ வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2017 9:11 pm

இரவின் நிலவொன்று
இறங்கி நிலம் வந்தது போல்...

வானில் நடைபயின்ற
வானவில் ஒன்று
தடுமாறி விழுந்து
தரைசேர்ந்தது போல்

யார் அவள்....?

உலகின் அழகுகளையெல்லாம்
அள்ளி எடுத்த பிரம்மன்
பெண்களை படைத்தான்
பெண்களே பெருமை கொள்ளும்
அழகாக அவளை படைத்தான்

சுடிதாருக்குள் பூட்டிவைத்த
குட்டி பூந்தோட்டம் அவள்

என்
கால் நூற்றாண்டு வயதையும்
தன்
கால் கொலுசொலியால்
களவாடியவள்

அவள்
அதிசயமான அழகல்ல
அழகான அதிசயம்

கற்கால கலையிலிருந்து
உயிர்பெற்ற சிலையவள்

கலைநயமிக்க
ஓவியன் ஒருவனின்
கற்பனை மொத்தத்தையும்
தின்று தீர்த்த ஓவியமவள்

எழுதும்போதே
எறும்புமொய்க்கும்
கரும்புக் கவிதையவள்

மேலும்

மிக அருமை நண்பா 29-Dec-2017 7:59 pm
அருமை.... 29-Dec-2017 2:43 pm
அ பெரியண்ணன் - Nishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2017 3:46 pm

உன்னை காணாத
போது
தேடும் என் விழிகள்
உன்னை
கண்ட பின் ஏனோ
தலை குனியும்
தரை மீது !!!.....
இமை பொழுதும்
இமைக்காது
நீ
பார்த்திருந்த போதும்
நொடிப்பொழுதும்
பார்த்து விட நாணும் என்
நாணம் !!!...
ஆயிரம் கேள்விகள் நீ கேட்டாலும்
ஒற்றை சொல்லையே
விடுவிக்கிறது என்
இரட்டை இதழும் !!!....
நீ பார்க்கும்
பார்வைக்குள்
பாதியாய் கரைகிறது
மனம் !!...
நின் மூச்சுக் காற்று
மோதிய மறு
கணம் .....
செயலிழந்து போனது
மௌனம் !!!!............
பக்கத்தில் நீ !!....
வெட்கத்தில் நான் !!....

மேலும்

நன்றி தோழரே !! 29-Dec-2017 5:39 pm
அருமை தோழி... 29-Dec-2017 2:43 pm
மிக்க நன்றி தோழரே !! 29-Dec-2017 12:53 pm
உங்களுடைய படைப்புகள் மிகவும் அழகா இருக்கின்றது . படைப்புகள் தொடரட்டும் . 29-Dec-2017 6:05 am
அ பெரியண்ணன் - அ பெரியண்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2017 6:44 pm

விவசாயி ஒருவர் முதல்வராகவும், விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள் அமைச்சர்களாக அரசு ஆளும் நிலை வரும்போது, தேசமும்,மக்களும் கையேந்தும் நிலை மாறும்,இது என்னுடைய ஆசை. அத்தகய நிலை வரும்போது மாற்றங்கள் எவ்வாறு இருக்கும்?. உங்களுடைய கருத்து என்ன?.

மேலும்

அவ்வாறு நடந்தால் மகிழ்வுதான்.... உலகிற்கே சோறு போடுவவனுக்கு கிடைக்கும் உன்னத பரிசு....... 20-Oct-2017 7:25 pm
டாக்டர்கள் ஆண்டால் நோயே வராதா? போலீஸ் கமிஷனர் ஆண்டால் குற்றமே நடக்காதா? காலேஜ் பிரின்சிபால் ஆண்டால் எல்லாரும் மேதையாகி விடுவார்களா ? அதுபோல் விவசாயி ஆண்டால் பஞ்சமே வராதா? சோம்பேறி உள்ளவரை சோற்றுப் பஞ்சம் இருந்தே தீரும்! ஆள்பவன் தேசப் பற்று, அறிவாற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும்; குடிமகன் உழைக்கத் தயாராய் இருக்க வேண்டும்! 12-Oct-2017 1:12 am
யார் வந்தால் என்ன சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்ற உலகியல் உண்மையை உணர்ந்து செயல் பட்டால் யார் வந்தாலும் மாற்றம் வரும் பாக்க்ராநங்கல் அணையை திறந்து வைத்து இதுதான் நமது ஆலயம் என்று அழைத்த நேரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அல்ல ! 09-Oct-2017 9:33 am
கருத்து பதிவு செய்தமைக்கு நன்றி... 08-Oct-2017 10:54 pm
அ பெரியண்ணன் - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2017 4:31 pm

மனிதம் இருந்திருந்தால் பிரபஞ்சத்தில் இந்நிலை வந்திருக்காது


ஆணும் பெண்ணும் சமம்
என்று சொல்வதே பெண்ணியம்...

ஆணை போல் நடந்து கொள்வது பெண்ணியம் இல்லை.
ஆணை மட்டம் தட்டுவது பெண்ணியம் இல்லை...

ஆண்மையில் பெண்மையும்...
பெண்மையில் ஆண்மையும்...
உண்டு என்று சொல்வதே...
ஆண்மை...பெண்மை...

ஆண்மை என்பது பெண்ணை அடிமைப்படுத்துவதில் இல்லை...
ஆண்மை என்பது
பெண்ணை எப்படி வைத்திருக்கிறாய் என்பதிலும்...
அவளின் உணர்வுகளை மதிப்பதோடு...
ஆணின் அகத்திலும் புறத்திலும் வீரத்தின் கற்போடு(ஒழுக்கத்தோடு) விளங்குகிறது...

அனைத்து உயிருக்கும் கற்பு உண்டு.
மன ஒழுக்கமே கற்பு...

வீரத்தில் உண்டு கற்பு...

மேலும்

மனிதம் உள்ள வீட்டை தான் உள்ளம் என்பார்கள் ஆனால் இன்று பலர் உள்ளம் இருப்பதாய் சொல்லிக்கொண்டு அரக்கர்களாக வாழ்கிறார்கள். வாழ்க்கை எனும் பயணத்தை காலை மாலை எனும் பொழுதுகள் கடிகார முட்களோடு வேகமாய் முடிவிதத்தை நோக்கி நகர்கிறது. எண்ணங்கள் எல்லாம் தூய்மையானால் எந்த அவளும் இந்த மண்ணில் இல்லை மனிதனும் மனிதனாய் ஆயுள் முடிவதற்குள் ஒரு நாள் முழுமையாக வாழ்வான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Oct-2017 10:58 am
மனதிற்கு இதமான வரிகள் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நிறுவியிருக்கிறீர்கள் . அருமை ! 09-Oct-2017 4:57 am
பொருத்தமான வண்ண ஓவியம் விழிப்பு உணர்வுப் படைப்பு பாராட்டுக்கள் 08-Oct-2017 7:53 pm
பெண்ணியம் மனித நேயம் ஆணுக்கும் பெண்ணிற்கும் கற்பியல் இயற்கை விவசாயம் போற்றுதற்குரிய கவிதை வரிகள் புதுமையான நவீன தமிழ் இலக்கியம் தங்களை பாராட்ட நேரில் திண்டிவனம் நகருக்கு குடும்பத்தினரோடு வர உள்ளோம் தமிழ் இலக்கிய அன்னை ஆசிகள் தொடரட்டும் தங்கள் இலக்கிய மலர் மாலைகள் 08-Oct-2017 7:50 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
அ பெரியண்ணன் - ப சண்முகவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 1:21 pm

கோகுல கண்ணன்:
குழல் ஊதும் கண்ணன்
புல்லகுழலின் மன்னன்
அம்மாவின் முகம்
அப்பாவின் வேகம்
புன்னகையில் பூ பறிப்பான்
பெண்களின் மனதை ஆற்பறிப்பான்
வெண்ணையே இவனின் எண்ணம்
அதை திருடுவதில் கைதேர்ந்த மன்னன்
கருனை குணம் கொண்டவன்
உதவியை உயிராய் கொண்டவன்
கோகுல கண்ணனே வாடா வா

மேலும்

நன்றி... 28-Aug-2016 5:37 pm
அழகு... 28-Aug-2016 3:36 pm
நன்றி தோழா..... 25-Aug-2016 10:00 pm
அ பெரியண்ணன் - ப சண்முகவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 1:31 pm

காதல் பயம்:
பேச துடிக்கும் மனசு
பேசினால் ஆபத்தாகிடுமோ அவள் வயசு
கண்களால் பேசினால் கண்டு கொள்ளவில்லை
கண்ணீர் வடித்தால்
காலம் கனியும் வரை
இதழில் இதமாக வழிந்தால்
காதல் என்று
கல்வி பயணம் முடியும் முன்
கருவிழியில் பிரலயம் கனவாக இருந்தால்
வாழ்ந்து இருப்பேன்
அணுக்களின் ஆட்டம் காதல் எனும் கூட்டம்
பழகியா என்னை பயத்தியகாரன் என்பார்
அவளை பருவ பெண் என்பார்
அவளின் படை திரட்டும் பார்வை
பயப்படுத்தும் இமை
யுத்தம் செய் என்னும் இதழ்
அவளின் இதயத்தின் வேகம்
எனக்கே அன்று முதல் இன்று வரை சோகம்

மேலும்

நன்றி.... 28-Aug-2016 5:44 pm
அழகு 28-Aug-2016 3:23 pm
நன்றி தோழா 25-Aug-2016 9:55 pm
அச்சங்கள் இருக்கலாம் காதலில் ஆனால் தாமதம் மட்டும் கூடாது 25-Aug-2016 5:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (115)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ம பாரத்

ம பாரத்

தருமபுரி,காரிமங்கலம்
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (116)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (116)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே