அவள்

இரவின் நிலவொன்று
இறங்கி நிலம் வந்தது போல்...

வானில் நடைபயின்ற
வானவில் ஒன்று
தடுமாறி விழுந்து
தரைசேர்ந்தது போல்

யார் அவள்....?

உலகின் அழகுகளையெல்லாம்
அள்ளி எடுத்த பிரம்மன்
பெண்களை படைத்தான்
பெண்களே பெருமை கொள்ளும்
அழகாக அவளை படைத்தான்

சுடிதாருக்குள் பூட்டிவைத்த
குட்டி பூந்தோட்டம் அவள்

என்
கால் நூற்றாண்டு வயதையும்
தன்
கால் கொலுசொலியால்
களவாடியவள்

அவள்
அதிசயமான அழகல்ல
அழகான அதிசயம்

கற்கால கலையிலிருந்து
உயிர்பெற்ற சிலையவள்

கலைநயமிக்க
ஓவியன் ஒருவனின்
கற்பனை மொத்தத்தையும்
தின்று தீர்த்த ஓவியமவள்

எழுதும்போதே
எறும்புமொய்க்கும்
கரும்புக் கவிதையவள்

என்னை காதலிக்க தெரியாதவன்
என்றுதான் நினைத்திருந்தேன்
அவளை பார்க்கும் வரை

கவிதை எழுதத் தெரியாதவன்
என்றுதான் நினைத்திருந்தேன்
அவள் கண்ணை பார்க்கும் வரை....

எழுதியவர் : பெ வீரா (28-Dec-17, 9:11 pm)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : aval
பார்வை : 411

மேலே