பெ வீரா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பெ வீரா |
இடம் | : Theni |
பிறந்த தேதி | : 16-Aug-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 265 |
புள்ளி | : 32 |
இயற்கையோடு இணைந்த தனிமையை காதலிப்பவன்
அவளின் வரவிற்காய் காத்திருந்து,
செந்நிற கோபத்துடன் சென்றிடும் அவனை
வெள்ளி நகைப்போடு எட்டிப்பார்க்கிறாள் நிலா!
வட்டநிலா
பிடித்து...
வானவில் வடிவில்
செதுக்கி...
புருவம் என்னும்
உருவம் கொடுத்து...
உன் கண்மேல்
ஒட்டிவிட்டு
ஓடியது யாரே....jQuery17103901763716712594_1547174933152
வழிதொலைத்த காட்டில்
வழிதுணையாய் நிலவுவர
நீயும் நானும் மட்டும்
நீண்டதூரம் செல்ல ஆசை......
கொட்டும் மழையி்ல்
ஒற்றைகுடையில்
இருவரும் ஒன்றாய்
ஒழிந்திட ஆசை....
பெளர்ணமி நிலவிருக்க
பக்கத்தில் நீயிருக்க
மொட்டைமாடி நின்று
நட்சத்திரம் எண்ண ஆசை....
உனக்குப் பிடித்த
பொருள்வாங்கி உன்வாசல்
வைத்துவிட்டு யாருக்கும்
தெரியாமல் ஓடிவிட ஆசை.....
ஒருபுத்தகம் முழுவதும்
உன்பெயர்எழுதி
அதை பத்திரப்படுத்தி
வைத்து கொள்ள ஆசை...
அதிகாலை நீகுளித்து
அருகில்வந்து தலைதுவட்ட
தெறிக்கும் துளிகள்பட்டு
என்தேகம் சிலிர்க்க ஆசை....
சின்னசின்ன
சண்டையிட ஆசை..
அதை முத்தமிட்டு
முடித்து கொள்ள
நிலாக்கள் நிறைந்த
விண்ணைப் பார்த்தேன்....
பூக்களால் போர்த்திய
மண்ணைப் பார்த்தேன்....
கவிதையால் செய்த
கண்ணைப் பார்த்தேன்....
காதல் என்னை
தின்னப் பார்த்தேன்....
எனக்கு வெளியேநின்று
என்னைப் பார்த்தேன்.....
ஏனென்றால் முதன்முதலாய்
உன்னைப் பார்த்தேன்....
்
சூரியப் பொட்டிட்ட
அதிகாலை வானத்தில்
அலைந்து திரிகின்ற
பறவைகளை பார்க்கும்போதும்...
அந்திமாலை நேரத்தில்
ஆற்றங்கரை ஓரத்தில்
நிலவுக்கும் எனக்குமான
நீண்ட உரையாடலின் போதும்....
ஒரு பள்ளத்தாக்கு
முழுக்க பூப்பூத்து
பக்கத்தில் நான்
நிற்க்கும் போதும்....
சாரல் மழையுடன் கூடிய
சன்னலோர பேருந்து
பயணத்தின் போதும்.....
இரண்டுவயது குழந்தையிடம்
சண்டையிட்டு நான்
தோற்க்கும் போதும்.....
அடைமழையில் நனைந்தபடியே
ஆற்றில் நான்
குளிக்கும் போதும்.....
தலையணையை
துணைவைத்து
தனிமையில் நான்
தூங்கும் போதும்.....
என் கவிதைக்கு
கிடைக்கும் முதல்
பாராட்டின் போதும்.....
எங்கிருந்தாலும்
அம்மாவை பற்றி
எழுதும்போது மட்டும்தான்
அத்தனை கவிதைகளும்
கண்ணிர் துளிகளுடனே
முற்றுபெறுகின்றன