முதன் முதலாய் உன்னை பார்தேன்

நிலாக்கள் நிறைந்த
விண்ணைப் பார்த்தேன்....

பூக்களால் போர்த்திய
மண்ணைப் பார்த்தேன்....

கவிதையால் செய்த
கண்ணைப் பார்த்தேன்....

காதல் என்னை
தின்னப் பார்த்தேன்....

எனக்கு வெளியேநின்று
என்னைப் பார்த்தேன்.....

ஏனென்றால் முதன்முதலாய்
உன்னைப் பார்த்தேன்....

எழுதியவர் : பெ வீரா (28-Mar-18, 7:42 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 701

மேலே