மரமும் மனித வாழ்வும்

" மரமும் மனித வாழ்வும்"

எல்லாம் இழந்தப் பின்பும் கடைசியாய் மிச்சமிருக்கும் நம்பிக்கை போலவே ...

இந்த இலையுதிர்ந்த மரத்தின் கிளைகளில் இளைப்பாறும்
வண்ணப் பறவைகள்.

இலைகள் உதிர்ந்தாலும் இருக்க இடம் கொடுக்கும் கிளைகள்..
இருக்க இடமின்றி துரத்திவிடும் சில மனிதர்கள்..

வாழ்வைத் தேடியலையும் பறவைகளுக்கு,
தாயின் மடியாய் மரமிருக்க,..
வசதிகளைத் தொலைத்திட்டு பட்டமரமாய் மனிதர்கள்...

வண்ணப் பறவைகளால்..
ஒளிர்கின்ற பட்டமரம்போல்..
வளங்கள் கொழித்து சிறக்கட்டும் அனைவரின் வாழ்வும்.

வாழ்க்கையை
வண்ணமயமாக்குவது,
வசதி மட்டுமன்று..
வளமான சிந்தனையும் தான்.


பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (28-Mar-18, 7:14 pm)
பார்வை : 148

மேலே