நானும் மாறுவேன் காதலனாக
என்னவளே காதல் என்ற ஒற்றைச் சொல்லை
உன் செவிகள் அறிந்திராதா?
காதல் என்னும் காட்சியை
உன் கண்கள் கண்டிடாதா?
காதலின் உணர்வை
உன் உள்ளம் உணர்ந்திடாதா?
ஏன் என்மீது உனக்கு
இரக்கம் பிறந்திடாதா?
பொழுதுகள் புலரும் முன் விழிகோர்த்து
அந்தி வானமாய் உன்னைக் காண
காத்திருக்கிறேன் காவலனாக
நீ சம்மதம் தெரிவித்தால்
நானும் மாறுவேன் காதலனாக