மகேஸ்வரி பெரியசாமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மகேஸ்வரி பெரியசாமி |
இடம் | : Selangor Malaysia |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 922 |
புள்ளி | : 458 |
ஒவ்வொருவரின் உள்ளத்திலும் புதைந்து கிடக்கும் எண்ணங்களை நேர்த்தியாக வெளிப்படுத்துவதில் கவிதையும், கதையும் முன்னிலை நிற்கின்றன. என் நிலையும் அதுவே.. என் உணர்வுகளை இடம்மாற்ற நான் தேர்ந்தெடுக்கும் வழி தான் கவிதை புனைவதும், கதை எழுதுவதும். இதில் வெற்றி கொண்டேனா என்று தெரியவில்லை. ஆனால் என் நாவல் ஒன்று நூல் வடிவம் கண்டதில் ஆத்ம திருப்தி கொள்கிறேன். தமிழோடு நான் பயணிப்பதில் அமைதி கொள்கிறேன்.
உறைந்திட்ட உணர்வுகள்*
*******-***********************
விருந்துக்கு
அழைத்து விஷம் பரிமாறும் வினோத
நேசமிது..
உண்டு மாள்வதா..?
மறுத்து வாழ்வதா..?
மறைந்திருந்து தாக்கிய ராமன் வில்அம்பை விட
மறந்திருந்து தாக்கும்
சொல்லம்பு கொடியது
என் வலியும் வார்த்தையும்
உன் செவியோடு நின்றே செல்லரித்து
போகின்றன
விலகி நின்று வெறுப்பின் வேர்களால்
வேலித்தாண்டி
உயிர் உறிஞ்சுகிறாய்
அலட்சியமாய்
நீ தந்த
வலியின் சுவை நீயறிய
என் இதழில் தொட்டு
உன் உணர்வில் வைத்தேன்
விழியோரம் நீர் கசிந்தாய்
துரோகத்தின் கூர்வாள் முதுகைத்துளைத்தாலும் வீரத்தழும்பென்றே வெளியில் சொல்வேன் கவலைவிடு
பருகி வைத்த கோப்பையில் உற
" பிரிதலில் ஒரு புரிதல்"
"புரிந்து கொள்ளாது சேர்ந்திருப்பதை விட பிரிந்திருப்பதே நலம்,, உனக்கும் இப்போது அதுவே, தேவை. யாரும் யாருக்கும் உண்மையில்லை என்பதே, மறுக்க முடியாத நிதர்சனம், வணக்கம்" இதோடு 100 முறைக்கு மேல் இந்தக் குறுஞ்செய்தியைப் படித்து விட்டாள் லாவண்யா. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் விழிகளில் இருந்து உருண்டோடும் கண்ணீர்த்துளிகள் நிற்க இடமின்றி, அவளின் கழுத்தில் சங்கமமாகியது. "அவ்வளவு வெறுப்பு ஏற்பட்டு விட்டதா என்மேல் அவருக்கு" தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் லாவண்யா. எழுத்துக்குச் சொந்தக்காரரை விழிகளில் சிறைபிடித்தாள். மூடிய விழிகளில் முழு உருவமும் காட்சியளிக்க , "இப்படி வில
பிரிதலில் ஒரு புரிதல்
பாகம் 2
எப்பொழுதும் அதிகாலையிலேயே எழுந்திடும் மகள் இன்று இன்னும் எழுந்திருக்கவில்லையே என்ற ஆச்சர்யம் கலந்த கவலையுடன் மகளை எழுப்பச் சென்றாள் லாவண்யாவின் தாய். மகளை உற்று நோக்குகையில், கண்ணீர் வடிந்து காய்ந்து போன தடயம் தெரிந்தது. கூடவே முகமும் சற்று வீங்கி இருப்பது போல் காட்சி அளித்தது. " என்னாயிற்று, மகள் அழுதிருக்காளே.. " மனம் பதறிப்போனது தாய், " லாவண்யா... லாக்கண்ணு எழுந்திருமா " என அவளைத் தொட்டு எழுப்புகையில் உடல் அனலாய் தகிப்பதை உணர்ந்தாள்.
அடிவயிற்றில் கலக்கமும், மனதினில் பதட்டமுமாய் மீண்டும் அவளை எழுப்பினாள். சிரமப்பட்டு கண்களை திறந்த லாவண்யா பதட்டத்துடன் தன்ன
பிரிதலில் ஒரு புரிதல்
பாகம்3 இறுதிப்பாகம்
வெளியே ஒரு இளைஞன் சிரித்த முகத்துடன், கையில் ஒரு அழகாக வடிவமைக்கப்பட்ட பூங்கொத்துடன் நின்று கொண்டிருந்தான். "வணக்கம் அம்மா, லாவண்யா என்பவரின் வீடு இதுதானே?" என்று கேட்டான். "ஆமாம் என்ன விஷயம்?" லாவண்யாவின் தாய் வினவ, "இந்தப் பூங்கொத்தை அவரிடம் சமர்ப்பிக்க சொல்லி எங்கள் நிறுவனத்தில் சொன்னார்கள்" .. இந்த அட்டையில் கையொப்பமிட்டு கொடுங்க.." என்று அந்தப் பூங்கொத்தையும் அட்டையையும் லாவண்யாவின் தாயிடம் கொடுத்தான். அட்டையை வாங்கி கையொப்பம் வைக்கும் போதுதான் பார்த்தார் அனுப்புபவர் ஜெயராமன் என்றும், பெறுபவர் லாவண்யா என்றும் இருந்தது. "இறைவா நன்றி.. மாப்பிள்ள
நினைவுகளில் நித்திலமாய்
தட்டுத் தடுமாறி தவழும் குழந்தையாய் நான்
விட்டு விடாமல் உன் விரல்களைப் பிடித்தப்படி
ஒவ்வொரு நொடியையும் உனக்காகவே வாழ்கிறேன்
விழியில் விழுந்த நாள் முதலாய் துளித்துளியாய்
இதயம் நுழைந்து இனிய கனவுகளை உயிர்ப்பித்து
வழிநெடுக மலர்ச்சாலையை எனதாக்கினாய்
வானத்திடம் ஊடல் கொண்டு ஒருநாள் மறையும் நிலவாய்
உனைவிட்டு ஒருநாளாவது பிரிந்திருக்க எண்ணம் கொண்டாலும்
ஒவ்வொரு நொடியையும் உன் அன்பினில் உருகிட வைத்தாய்
ஆயிரம் ஆயிரம் நினைவுகளில் அடங்கிய
ஆத்மார்த்தமான உணர்வுகள் ஒன்றிணைந்து
ஆர்ப்பரிக்க வைக்கின்றது ஆழ்மனத்தை
நிறைகுடமாய் நிறைந்திருக்கின்றது என் இதயத்தில்
கறைபடாத
#மஞ்சள் முகமே என் மாமன் மகளே#
மஞ்சள் முகமே என் மாமன் மகளே
தஞ்சமென உன்னனெனச்சேன் தாங்கிடுபுள்ள
கொஞ்சிடும் மாமன் இவன் குழந்தைபோல
கெஞ்சிட வைக்காமல் ஏத்துக்கபுள்ள
மஞ்சள் முகமே என் மாமன் மகளே
சந்திச்சு நாளாச்சு என் தங்கமே தங்கம்
சிந்திச்சு பாரடி மாமன் நேசத்தைக் கொஞ்சம்
நெஞ்சக்கூட்டினில் அலைபாயுதுடி என் உயிர்மூச்சு
மஞ்சள் முகமே என் மாமன் மகளே
எஞ்சி நிற்கும் கொஞ்ச காலத்தை
வஞ்சி உன்னோடு வாழ்ந்திடவே
அஞ்சி அஞ்சி காத்திருக்கேன் வந்திடுபுள்ள..
பெ.மகேஸ்வரி
இனிதாகட்டும் இல்லறம்
ஒரு மூன்று முடிச்சுக்கு
இத்துணை சக்தியா?
இரு மனங்களின் சங்கமம்
தேவையில்லையா?
இதுவரை அறியாத கணவன்,
மனைவி அவளென உரிமைக்காட்டுவான்.
எதுவும் பிடிக்கவில்லையென்றால்
வெறும் தாளாய் கிழித்தெறிந்து விடுவான்.
என்றும் இனி அவன் தானே என
அடங்கிப்போவாள்,
ஒன்றும் செய்திட வழியின்றிப்
படைத்தவனை நிந்திப்பாள்.
ஒருவனுக்கொருத்தி எனும் கூற்றைப்
பற்றெனப் பற்றி,
கருக்கலில் எழுந்து கடமைதனை
கனிவாய் நல்குவாள்..
இருமனங் கலந்து இயந்து வாழ
இவளெடுத்த முயற்சிகள் வீணே..
கருங்கல் மனத்தினை கரைத்திட
வழியின்றி கலைந்தன அவை தானே..
யாருமற்ற நதியில் இத்துப்போன
படகாய் இவள
.... " எமதினிய நட்பே....."
நீ சிந்திக்கும் ஒவ்வொரு நொடியும்
விதி உன்னிடம் விளையாடுகிறது
நீ நிஜமென எண்ணும் அனைத்தும்
நிழலாகவே இருக்கிறது
உடலின் ஊனம் ஊரெல்லாம் உணரும்
உள்ளத்தின் ஊனம் உனக்கு மட்டுமே தெரியும்
நீ எதுகையிலும் மோனையிலும் எடுத்தியம்பினாலும்
ரசிக்க முடியாமல் ரணப்படுகிறது மனம்
உன் கண்ணீரை துடைக்க நீட்டிய கரம் கூட
காற்றை மட்டுமே கலைக்கிறது..
ஒவ்வொரு முடிவும் அடுத்த
தொடக்கத்தின் அறிகுறியே!
பிறந்த போதே பல்லாயிரம் உயிரை வெற்றி கொண்டு
பிறந்த உனக்கு உன் மனதை வெற்றி கொள்ளத் தெரியவில்லையா?
நீ என்றும் நிழல் அல்ல,
நீ தான் விதை, நீதான் விருட்சம்
நீதான் உண்மை...நீத
நேரமில்லாமல் தவித்தேன் கவிதையினை எழுத
கண்டேன் எனது சீதையை
மகிழ்ச்சியினில் திளைத்தேன்
'கண்டேன் சீதை' என்ற அனுமன் மொழி
ராமன் செவியினை எட்டியது போல்
ஆற்றில்
கரைபுரண்டு ஓடும் நீரினைப் போல்
முதன்முறையாக
கர்ப்பமுற்ற மனைவியைக்
காணும் கணவனைப் போல்
எதைக்கண்டாலும்
துள்ளிக் குதித்தாடும் இளங்கன்றைப் போல்
பெற்றோர் முன்னால்
மணப்பந்தலில்
காதலித்தவளை கரம்பிடித்த காதலனைப் போல்
கடலாக தெரிந்த நேரமோ
கடுகாக தெரிந்தது
எழுதத் தொடங்கினேன் அக்கணமே
பேனாவிலிருந்து
மையாக கொட்டியது கவிதை
மலைஉச்சியில் இருந்து கொட்டும்
அருவியினைப் போல்
உன்னைக் கண்டவுடன்.............