உன்னைக் கண்டவுடன்

நேரமில்லாமல் தவித்தேன் கவிதையினை எழுத
கண்டேன் எனது சீதையை
மகிழ்ச்சியினில் திளைத்தேன்
'கண்டேன் சீதை' என்ற அனுமன் மொழி
ராமன் செவியினை எட்டியது போல்
ஆற்றில்
கரைபுரண்டு ஓடும் நீரினைப் போல்
முதன்முறையாக
கர்ப்பமுற்ற மனைவியைக்
காணும் கணவனைப் போல்
எதைக்கண்டாலும்
துள்ளிக் குதித்தாடும் இளங்கன்றைப் போல்
பெற்றோர் முன்னால்
மணப்பந்தலில்
காதலித்தவளை கரம்பிடித்த காதலனைப் போல்
கடலாக தெரிந்த நேரமோ
கடுகாக தெரிந்தது
எழுதத் தொடங்கினேன் அக்கணமே
பேனாவிலிருந்து
மையாக கொட்டியது கவிதை
மலைஉச்சியில் இருந்து கொட்டும்
அருவியினைப் போல்
உன்னைக் கண்டவுடன்.............

எழுதியவர் : சரத் குமார் (29-Nov-16, 8:06 pm)
Tanglish : unnaik kandavudan
பார்வை : 271

மேலே