நீண்டுவிடட்டும் இந்த இரவு

கரு வானில் மின்னித்
திரியும் விண்மீன்களையும்
கதிரவன் ஒளியை களவுகொண்டு
உலவும் நிலவையும்
அந்த நிலவின் ஒளியையும்
திருடி புன்னகைக்கும் கற்களையும்
முதன்முறையாக இரசிக்கக்
கற்றுக் கொண்டேன் உன் அருகாமையால்.
அந்த உயிரற்ற பொருட்களுக்குக் கூட
உணர்விட்ட உன் அருகாமையை
நான் இழக்கத்தான் விரும்புவேனா?
நீண்டுவிடட்டும் இந்த இரவு!