சிவராமகிருட்டிணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவராமகிருட்டிணன்
இடம்:  salem
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2011
பார்த்தவர்கள்:  479
புள்ளி:  275

என்னைப் பற்றி...

கணிதவியல் ஆராய்ச்சி மாணவர்.

என் படைப்புகள்
சிவராமகிருட்டிணன் செய்திகள்
சிவராமகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2017 7:09 pm

அடிக்கடிக் குத்துவதால்
முனை மழுங்கிப்போய்விடும்
என்றெண்ணிய வேல்விழிகள்
குத்திவிடும் ஒவ்வொரு முறையும்
மென்மேலும் மெருகேறி
அழகாய்த் தெரிவதேனோ?

மேலும்

சிவராமகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2017 10:00 am

அவளை விட்டுவிலகிவிடலாம் என்ற எண்ணங்களெல்லாம்
அவள் பின்னப்பட்ட கூந்தலில் இருந்து
விலகி ஓடி காற்றில் பறந்திடும் முடிகளிடமும்
அவள் கூந்தலை வளைத்திருக்கும் சடைவளையிடமும்
எப்படியோ என்னை அறியாமல் தோற்றுவிடுகின்றன...

மேலும்

சிவராமகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2017 6:53 am

காற்றிலே கலந்து வந்து
தன்னை நனைத்திட்ட கார்முகிலை
கற்களும் எண்ணிடுமோ தன் காதலென?
கதிரவன் வந்தால் கணப்பொழுதில்
வானில் மீண்டும் சென்றிடுமென்றறியாமல்...
அக்கார்முகில் எண்ணினால்
அக்கதிரவனைக் கட்டிப்போட்டு
இருந்திடலாம் அக்கற்களின் காதலியாய்...

மேலும்

சிவராமகிருட்டிணன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2017 10:54 pm

மணத்திலும் நிறத்திலும்
எனக்குப் பிடித்தமான
மலரொன்று கண்டேன்!
அதன் அழகினில் மயங்கிட
அதுதரும் கவிகளை எழுதி
சிறு கர்வமும் கொண்டேன்!
நினைத்திடும் நேரத்தில் என் முகத்திலும்
புன்னகை பூக்கவைக்கும் அப்பூவை
பறித்திடும் வழியும் அறியவில்லை…
பறித்தாலும் அதைப் பயன்படுத்தும்
பக்குவமும் என்னிடம் இல்லை…
இந்த எண்ணத்திலேயே என் மனதிருக்க
எங்கோ மறைவிலிருந்து அம்மலர் வீசும்
மணத்தைப் பிடித்து அதற்கான கவிகளை
மட்டும் எழுதும் ஓர் இரசிகனாய்…

மேலும்

நன்றி நண்பரே... 11-Jun-2017 6:43 am
அருமை அருமை ... 11-Jun-2017 6:17 am
சிவராமகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2017 10:54 pm

மணத்திலும் நிறத்திலும்
எனக்குப் பிடித்தமான
மலரொன்று கண்டேன்!
அதன் அழகினில் மயங்கிட
அதுதரும் கவிகளை எழுதி
சிறு கர்வமும் கொண்டேன்!
நினைத்திடும் நேரத்தில் என் முகத்திலும்
புன்னகை பூக்கவைக்கும் அப்பூவை
பறித்திடும் வழியும் அறியவில்லை…
பறித்தாலும் அதைப் பயன்படுத்தும்
பக்குவமும் என்னிடம் இல்லை…
இந்த எண்ணத்திலேயே என் மனதிருக்க
எங்கோ மறைவிலிருந்து அம்மலர் வீசும்
மணத்தைப் பிடித்து அதற்கான கவிகளை
மட்டும் எழுதும் ஓர் இரசிகனாய்…

மேலும்

நன்றி நண்பரே... 11-Jun-2017 6:43 am
அருமை அருமை ... 11-Jun-2017 6:17 am
சிவராமகிருட்டிணன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2017 7:45 pm

எனக்கு காட்டவேண்டாம் என்று
கதவருகில் நீ மறைத்துவைத்த
பாதி புன்னகைத்தான்
மீதி புன்னகையின் மொத்த
அழகையும் காட்டிக்கொடுத்துவிட்டதே!!!
இன்னும் ஏன் மறைந்திருக்கிறாய்???
இல்லை! நீ இதுபோல் மறைந்தே இரு...

மேலும்

நன்றி... 03-Jun-2017 9:36 pm
அருமை .. 03-Jun-2017 9:11 pm
சிவராமகிருட்டிணன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2017 9:03 am

"உன் கண் மலரில் களிநடனமாடும்
அந்த கருவண்டுகள் வந்து
என்னுள் தேனெடுத்துச் செல்லாதோ???"
என்று அந்த மலர்களும்
என்னைப் போல ஏங்கிவிடும்
சற்று தள்ளியே நில்லடி....

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி மற்றும் நன்றி நண்பரே... 14-May-2017 9:17 pm
கருவண்டு கண்களில் மயங்குதே மலர் இதயங்கள்... 13-May-2017 3:11 pm
சிவராமகிருட்டிணன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2017 4:37 pm

பல நூறாயிரம் மதிப்புள்ள
நகைகள் அனைத்தும் தோற்றன...
அந்த நகைக்கூட்டிய அவளின் அழகில்
ஊர்க்கண் படக்கூடாதென
அவள் முகத்தில் வைக்கப்பட்ட
அந்த ஒற்றை கருப்பு மையிடம்...

மேலும்

கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி மற்றும் நன்றி நண்பரே... 19-Apr-2017 12:07 am
கண்படாமலிருக்க வைத்த மை கண்டிட அழகு மெருகேருகிறது இனிமை. வாழ்த்துக்கள் நண்பரே... 18-Apr-2017 9:33 pm

எனது எவ்வைகயான துன்பங்களையும்
துடைத்தெறியும் ஆற்றல் கொண்டது
அவளிதழில் அரும்பி என்நெஞ்சத்தில்
குடிகொள்ளும் அவள்புன்னகை.

இப்பொழுதோ! நானொரு துன்பத்தில்.
தீர்த்து வைக்க வருவாளா? எனது
துன்பம் என்னவோ அந்த புன்னகையை
சிலநாள் காணவில்லை என்பதே.

காத்திருக்கிறேன் அவளின் கால்கொலுசின்
ஓசையது என்காதுகளில் விழுந்து
என்நெஞ்சத்தின் துன்பத்தை தனது
புன்னகையால் துடைத்தெறிவாளென்று.

மேலும்

புன்னகையில் சோகத்தை குழந்தை மட்டுமல்ல காதலியும் நீக்கக் கூடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2017 8:44 am

புன்னகையில் போர்ப்புரியும் விண்நகையாளே!
கண்களிலே இயல்கமழும் கயல்விழியாளே!

கன்னங்களைக் கிள்ளத்தோன்றும் பனிமலராளே!
தீண்டிவிட எண்ணவைக்கும் நனிஇதழாளே!

குரல்களிலே நனைத்துவிடும் மென்பனியாளே!
கொலுசுகளால் வருடிவிடும் இன்னிசையாளே!

மையினிலே மசியவைக்கும் இமையழகாளே!
மையினையே தோற்கவைக்கும் கார்குழலாளே!

நட்டுவைத்த மலர்ச் செடியின் நறுமுகையாளே!
கசந்துவிடும் காலங்களில் தேன்மலராளே!

இமைகளிலே பேசிவிடும் யாழ்மொழியாளே! - என்
இரவுகளை இன்பமாக்கும் இயல்மொழியாளே!

கண்டவுடன் கலந்துவிடும் கதிரொளியாளே! -என்
இருண்டுவிட்ட தனிமையிலே நிலவொளியாளே!

நினைவுகளில் நிறைந்துவிட்ட வெண்முகிலாளே! - நான

மேலும்

சிவராமகிருட்டிணன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2017 10:04 pm

கடல் அலைபோல் நீ...
என்னைத் தொடத் துணிந்து
தோற்றுப்போகிறாய் என்று
நினைத்துக்கொண்டு- நீ
தொடமுடியாத தொலைவில்
நின்றுகொண்டிருக்கும் நான்...

நீ தொட முயற்சித்திருக்கமாட்டாய்...
இருந்தாலும் என்னைத் தேற்றிக்கொள்கிறேன்
கண்களால் தொட முயற்ச்சித்து
என்னைப்போல தோற்றிருப்பாய் என்று...

நீ அலை போல்
என் பின் அலைந்திருக்க - நான்
கண்களைத் திருப்பிக்கொண்டு
காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டேன்.
அலை எழுப்பும் அழகிய இசையைப்போல்
உன் கொலுசுகள் கொஞ்சும்
ஒலியை என் நெஞ்சத்தில்
இன்னிசையையாய் பதிய வைக்க...

உன் கண்கள் ஏமாற்றினாலும் - நான்
காணாத உன் கால்களின் கவிகளாய்
என்னுடன் பேசிவிட்டுச் செ

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... 31-Jan-2017 8:19 am
அடடா.. அழகிய தேவதையை ராகம் மீட்டச் செய்கிறது இதமான கொலுசின் ராகம் 31-Jan-2017 12:54 am

யாருமில்லா இருள் நிறைந்த
பாதையில் தனிமையில் பயணிக்க

செல்லும் வழியில் அங்கங்கே
ஒளிக்கு வைக்கப்பட்ட விளக்குகளாய்
அவள் அவள் முகம் தெரிய

அந்த விளக்கின் வெளிச்சத்தைச்
சுற்றித்திரியும் சிறு பூச்சிகளாய்
என் நினைவுகளும் உணர்வுகளும்…

பூச்சிகள் என்னதான்
விளக்கையேச் சுற்றித்திரிந்தாலும்
அந்த விளக்கு படைப்பட்டது
அந்த பூச்சிகளுக்காக இல்லையே…

அந்தபூச்சிகள் தொட முயற்ச்சித்து
விளக்கில் முட்டிமோதி வீழ்ந்தாலும்
அந்த விளக்கு காத்துக்கொண்டுதான்
இருக்கும் அதன் ஒளியை
யாருக்குக்கொடுப்பதென்ற சிந்தனையில்...

அது புரிந்தும் புன்னகைத்துக்கொண்டே
நடந்து சென்றேன் அந்த தனிமைப்பாதையில்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

சுரேஷ் சிதம்பரம்

சுரேஷ் சிதம்பரம்

பென்னகோணம், பெரம்பலூர் மா
ஸ்ரீமதி

ஸ்ரீமதி

கோவை
புகழ்விழி

புகழ்விழி

கும்பகோணம்

இவர் பின்தொடர்பவர்கள் (41)

வாகை வென்றான்

வாகை வென்றான்

யாதும் ஊரே
லோகுசரன்.ஆ

லோகுசரன்.ஆ

செஞ்சி(கல்லாலிப்பட்டு)

இவரை பின்தொடர்பவர்கள் (40)

மேலே