ஓர் மலருக்கு…
மணத்திலும் நிறத்திலும்
எனக்குப் பிடித்தமான
மலரொன்று கண்டேன்!
அதன் அழகினில் மயங்கிட
அதுதரும் கவிகளை எழுதி
சிறு கர்வமும் கொண்டேன்!
நினைத்திடும் நேரத்தில் என் முகத்திலும்
புன்னகை பூக்கவைக்கும் அப்பூவை
பறித்திடும் வழியும் அறியவில்லை…
பறித்தாலும் அதைப் பயன்படுத்தும்
பக்குவமும் என்னிடம் இல்லை…
இந்த எண்ணத்திலேயே என் மனதிருக்க
எங்கோ மறைவிலிருந்து அம்மலர் வீசும்
மணத்தைப் பிடித்து அதற்கான கவிகளை
மட்டும் எழுதும் ஓர் இரசிகனாய்…