அதிசயமே
அதிசயமே . . .
கிழக்கு மேற்க்கு
தூரத்தை
தினம் அளந்தெழுதும்
சூரியனும் . .
இராவெல்லாம்
ஊறினாலும்
பாசம் பூக்காத
பால்நிலவும்
போர்த்திய
பனி போர்வைக்குள்
புழுங்கி வேர்த்தொழுகும்
பனி ஆறும்
தலைகீழாய்
கவிழ்ந்த நதியாய்
பொங்கிக் குதித்தெழும்
அருவியும்
பூமித்தாயின்
பித்த வெடிப்பாகிப்போன
பஞ்சம் கொஞ்சும்
பாலை விரிசல்களும்
அந்திக்கு அவிழ்ந்து
கமழ
அடம்பிடித்துக்
காத்திருக்கும்
மொட்டுகளும்
அளந்துவிட்ட
இடைவெளியில்
கணுத்தரித்த
பசுந்தழைகளும்
மூர்ச்சையான
மூச்சுக்காற்றை
சுரமாய் உயிர்பித்த
மூங்கிலும்
ஆறு சுமந்துவந்த
தாய்வீட்டு
சீதனமாய்
குறுகிபோன மலைகளாய்
கூழாங்கற்களும்
கல்லுக்குள் கசிந்த
ஈரத்தில்
காடாகிப்போன
சிறுவித்துக்களும்
அதிசயமே! . . . . .
சு.உமாதேவி

