S UMADEVI - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : S UMADEVI |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 1037 |
புள்ளி | : 218 |
சாதிக்கும் இளைஞனுக்கு "சோகம்" அவசியம்
சோகங்கள்
சுகத்தை தருகிறது
இன்றைய
இளைஞர்களுக்கு
தோல்விகள்
இதன் காரணமல்ல
வெற்றிகள் கூட
இதிலிருந்துதான்
தொடங்குகிறது.
சோகத்தின் சுமை
தாங்காமல்
தன்னை
திசை திருப்பி
கொள்வதால்....!
திசை திருப்ப
மறந்து அல்லது
மறுத்து போனவன்
கோழையாய்
அழியா துன்பத்தை
அளித்து செல்கிறான்
அந்த குடும்பத்துக்கு
அப்படியென்ன
உழைத்துவிட்டது
இந்த புல்
அதிகாலையிலே
இப்படி
வியர்க்க...
என் கவிதை
என் இரவுகளின் இருள் குடித்து
வெள்ளொளி புகுத்தி
வானவிற்களை நிறைக்கிறது
மனவெளி எங்கும்
என் கவிதை!
என் பகல்களின் விழிகளைத் திறவாது
நித்திரையை அணையிட்டு
கனவுப்பயிர் விதைக்கிறது
என் கவிதை!
என் வேதனைகளின்
ஆணி வேர்களை
அறுவடை செய்யும்
கலைக்கூலியாய்
என்கவிதை !
என் கற்பனைகளைச் செதுக்கி
கருச்சிதறல் காணாது
வரிவடிவூட்டும் சிறந்தச் சிற்பியாய்
என்கவிதை!
என் பொழுதுகளைத் தன் மடிசாய்த்து
நேர்த்தியாய்த் திரிக்கும்
தேர்ந்த நெசவாளனாய்
என் கவிதை!
S.UMADEVI
பயிர்க்குழி
சிரித்தாள்
அவள் கன்னக் குழிகள்
என் இன்பத்தின்
பயிர்க்குழியானது!
S.UMADEVI
அவள் நினைவே சங்கீதம்
வானத்து நிலவை
ஏந்துகிறேன்
என்
இருகரங்களால்!
இரவல் ஒளிகேட்டு
இரந்து நிற்கிறது
ஞாயிறும் அவள் முக ஒளிகண்டு!
சிதறிய அவள் துளிப் புன்னகையும்
முளைவிட்டு நிற்கிறது
பால்வெளியில் புது விண்மீனாய்!
பஞ்சுவிரலின்
அவள் ஒவ்வொரு தீண்டலும்
ஆனந்தக் கடலுக்குள்
ஓர் அதிசயத் தீவை எனக்கென எழுப்புவதாய்!
அவள் குரல்கேட்டு
என் செவிப்பறைகள்
இழைக்கின்றன இசைக்கோட்டைக்கே
புதுஉருவை!
என் கரம் பற்றிய
அவள் நடைகள்
என் ஆயுளை
நீட்டித்து எழுதும்
எழுத்தாணி ஆகின்றன
காலத்தின் கரங்களில்!
என் உயிரின்
வேர் தொட்டுப் பாயும்
குருதி ஓட்டத்தின்
நடை ஆகிப் போகிறது
அவள் நி
நாணம்
சிதறும்
வெள்ளிக் காசுக்குள்
ஒளித்தால் அவள் சிரிப்பை !
நான் பார்த்த மறுகணமே
திசைகள் எட்டும்
திரையிட்டு மறைத்தன
தம்முகத்தை
அவள் நாணத்தை உருவி!
S.UMADEVI
மௌனத்தால் பேசவா!
அவள் வாய் மொழிகள்
வெற்றிடத்தே சிந்திய ஒலி போல்
இதயச் சுவர்களுக்குள்
எதிரொலித்து அடங்காததாய் ...
அவள் மௌனங்கள்
அர்த்தம் ஆயிரம் கற்பித்து
எண்ணங்களைப் புரட்டிக் கொண்டே ....
கொழுத்த அகராதியின் பக்கங்களாய்...
அவள் நினைவுகளில்
தீய்ந்த பொழுதுகளின் மணத்தில்
ஊறிக்கொண்டே என் நடை பாதைகள்
பிரியாணிப்பதாய் ....
அவள் இதழ் வடியும்
குறும் புன்னகைகள்
என் காரியக்கிரமத்தின் சக்கரத்தை ...
சுழலவிடாது ...அடையிட்டு த்தடுப்பதாய்..
புதிர் போடும் அவள் பார்வைகளோ
கொக்கிகள் ஆகி
மூளைச் சலவை செய்து
என் நாட்களை ...தொங்க விடுவதாய்...
மனக் கண்கள்
காட்சி மாறாது காண்க
எனக்குள் வெகுதூரம்
மனச் சிறகேறி
எனக்குள் வெகுதூரம்
வேர் ஊன்றி விரிகின்றன
என் எண்ணக் கிளைகள்!
என் காலடி ஓசைகளும்
நிசப்தத்தின் நீளுறக்கத்தை
நீட்டிப்பதாய்!
ஆனந்தத்தின் எல்லை ஆரம்பம் எனும்
பெயர்ப் பதாகை ஆங்கே
வரவேற்கிறது
இரு கரம் கூப்பி என்னை!
எங்கெங்கிலும்
இரவின் பனியாடைகளை
உலரவைத்துக் கொண்டிருக்கிறது
விடியல்!
பசும்வெளி எங்கும்
பனி எழுதிய
துளிப்பாக்களை
ஊஞ்சலாடி ரசித்தவாறு காற்று!
பனித் துளிகளுக்குள்
தன் பிம்பம் பதித்து
மேக உடுப்பை
சரி செய்தவாறு வானம்!
நுரை பொங்கச் சிரிக்கும்
அருவிகளின் ஆர்ப்பரிப்போ
தனக்குள் அமைதிப் பூங்கா அமைத்து
அமர வைக்கிறது மனதை!
முகடு காட்டாது வாஞ்சையாய்
நிற்கும் ம
குழந்தையே தெய்வம்
குழந்தைகள்
கலப்படமில்லா அன்புக்கு
காப்புரிமை பெற்றோராய்!
அவர்களின் நட்பு வானம்
நிறப் பிரிகை
அடைவதில்லை!
அவர்களின் பார்வையில்
சாதியும் மதமும்
அம்மணமாய்!
இனம் தாண்டி
விளையும் பாசத்தின்
உற்பத்தியாளர்கள்!
கடவுளைக் கண் முன்
காட்சிப் படுத்துபவர்கள்
தங்கள் காரியங்களால்! !
சு.உமாதேவி
காதல் என்பது புரியவில்லை
உன்னை நான் பார்க்கும்வரை
சுவாசம் நிற்பதை அறிந்ததில்லை
உன் கண்கள் என் கண் வருடும்வரை
கைகள் பேசுமென அறியவில்லை
உன் கைகள் என் கை பிடிக்கும் வரை
செவிகள் மகிழ்வதை அறிந்ததில்லை
உன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை
தென்றலின் சுகமும் அறிந்ததில்லை
உன்னுடன் திடலில் நடக்கும் வரை
மழையின் அழகு தெரியவில்லை
உன்னுடன் நானும் நனையும்வரை
நேரத்தின் அருமை புரியவில்லை
உன்னுடன் நேரம் கழிக்கும்வரை
பிரிவின் வலியும் தெரியவில்லை
உன்னை நான் பிரிந்தவரை
காலத்தின் அருமை தெரிந்ததில்லை
உன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை
#கவிதையோ கவிதை..!
உண்ணும்போதும் உறங்கும்போதும்
உடன் வருமே கவிதை..!
அமர்ந்த போதும் நடக்கும்போதும்
கரம் பிடிக்கும் கவிதை…!
சிரிக்கும் போதும் வலிக்கும் போதும்
துணையெனவே கவிதை.!
கொடுமைகளை வறுமைகளைக்
குடித்து வளரும் கவிதை..!
காற்றினிலும் மழையினிலும்
குளிர்ந்து வரும் கவிதை..!
ஆற்றினிலே படகு விட்டு
ஆடி வரும் கவிதை…!
அழகான மயிலைத் தொட்டு
தோகை விரிக்கும் கவிதை..!
இயற்கையினை காதல் கொண்டு
எழுதி வைக்கும் கவிதை..!
இறைவனவனை எழுதி எழுதி
ஆராதிக்கும் அழகு கவிதை.!
கவலையோடு வலிகளையே
கண்ணீரில் வடிக்கும் கவிதை..!
காதல் வந்தால் போதும்டா
கை நிறைக்கும் கவிதை..!
தனிமை