K ARULVEL - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  K ARULVEL
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Mar-2017
பார்த்தவர்கள்:  846
புள்ளி:  13

என் படைப்புகள்
K ARULVEL செய்திகள்
K ARULVEL - S UMADEVI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2017 4:10 pm

அன்பே உன்னால்.......

என் நாசி தொட்ட
காற்று ஏனோ
சுமந்து வந்த உன்
வாசத்தை
வலிய புகுத்திவிட்டு
என் வாட்டம் காண
சிரிக்கிறதே! . . .

என் நிம்மதியின்
கையிருப்பை
நித்தமும் பருகி அள்ளி
நின் வாயிலில்
தெளித்து வைத்து
நிலா
காய்ந்துபோகிறதே! . . .

காரிருள் பூத்த
வானமது
விதைத்திட்ட
வெள்ளிக் கம்பிகளாய்
தடம் புரளாது
தரைமுட்டி
தெறித்துவிட்ட
மழைத்துளியை
படம் பிடித்த
மின்னலது
உன் பார்வையை
நினைவுறுத்தி
பசிமறக்கச் செய்கிறதே! . . .

பச்சிளங் கிளையமர்ந்த
கருங்குயிலின் கானமது
லயிக்காதஇசை
ஓசையாகி
உன்
சலங்கை ஒலி பின்னே
செவியிரண்டும் நீள்கிறதே! . . .

உன் நினைவில்
உயிர

மேலும்

அருமை 11-Jun-2017 11:33 am
K ARULVEL - S UMADEVI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2017 4:10 pm

அன்பே உன்னால்.......

என் நாசி தொட்ட
காற்று ஏனோ
சுமந்து வந்த உன்
வாசத்தை
வலிய புகுத்திவிட்டு
என் வாட்டம் காண
சிரிக்கிறதே! . . .

என் நிம்மதியின்
கையிருப்பை
நித்தமும் பருகி அள்ளி
நின் வாயிலில்
தெளித்து வைத்து
நிலா
காய்ந்துபோகிறதே! . . .

காரிருள் பூத்த
வானமது
விதைத்திட்ட
வெள்ளிக் கம்பிகளாய்
தடம் புரளாது
தரைமுட்டி
தெறித்துவிட்ட
மழைத்துளியை
படம் பிடித்த
மின்னலது
உன் பார்வையை
நினைவுறுத்தி
பசிமறக்கச் செய்கிறதே! . . .

பச்சிளங் கிளையமர்ந்த
கருங்குயிலின் கானமது
லயிக்காதஇசை
ஓசையாகி
உன்
சலங்கை ஒலி பின்னே
செவியிரண்டும் நீள்கிறதே! . . .

உன் நினைவில்
உயிர

மேலும்

அருமை 11-Jun-2017 11:33 am
K ARULVEL - S UMADEVI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2017 5:20 pm

கல்லூரிக் காலம் . . .

காலவிருட்சத்தின் கிளையில்
மாணவப் பூக்களாய்
அமர்ந்திருந்த அந்த மூன்றாண்டு
கல்லூரி வாசம்
இன்னும் நாசிதொட்டு
மணம் வீசிக்கொண்டே . . . . .

கிளை கொழுத்து பசுந்தளை ஆட்டி
நுழைவாயில் இருமறுங்கும்
வனப்பான வரவேற்பாளராய்
மரங்கள் தன் கைகூப்பும் . . . .

சீருடையன்றி வேறுடை
அணியா நாம்
அன்றுமுதல்
வண்ணம் பல தாங்கி
மிதந்தோமே கனவுகளில் . . .

புத்தகப்பொதி இறக்கி
கைக்கு அடக்கமாய்
கையேடு சிலவற்றை
ஒய்யாரமாய் தூக்கி
நவீன நடைபயில
பூமியே புல்லரிக்க
புல்லும் குத்திட்டு நிற்குமே . .

சிறுபருக்கை தனைகூட
பகிர்ந்துண்ணும் காக்கைபோல்
உணவுதன்னை உண்டிட்ட
உறங்கா

மேலும்

நல்ல நட்பினை காலத்தால் கூட எதுவும் செய்து விட முடியாதது 06-Jun-2017 4:53 pm
Thank u. Dear brother suresh chidambaram yr comments are so nice 15-May-2017 9:05 pm
சிறுபருக்கைதனைக் கூட பகிர்ந்துண்ணும் காக்கை போல.. குங்குமச் சிமிழ் மாதிரி டிபன் பாக்ஸ்ல கொண்டு வந்த சாப்பாட்ட அங்க இருக்க எல்லாருக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டு கையில் ஒட்டியிருக்கும் கடைசிப்பருக்கையை தோழி அவள் வாய்க்கு கொண்டு செல்லும்போதும் வம்பாய் அவள் விரல் பிடித்து ஒட்டியிருக்கும் ஒரு பருக்கையையும் பிடுங்கித்தின்று அடிவாங்கிய நினைவுகள்.. அப்புரம் கேண்டீன்ல போயி தோழிக்கு சாப்பாடு வாங்கி குடுகுறதுலாம் வேறு கதை.. ஆனா அப்பவும் ஒரு வாயி ஊட்டி விட்டுட்டு சாப்பிட்ட தோழியின் நினைவு.. அருமை.. வாழ்த்துகள் 15-May-2017 6:10 pm
Thanks a lot dear brother GAngaimani 15-May-2017 12:20 pm
K ARULVEL - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2017 5:27 pm

பட்டம்

பள்ளியறைப் பாடம்
பரத்தையிடம் கற்றான்
பட்டம் கிடைத்தது
’எயிட்ஸ் நோயாளி’ . . .

மேலும்

K ARULVEL - S UMADEVI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2017 5:56 pm

மனமே நீ . . . .

சிலநேரம்
அன்பின் திரியிட்ட
அகல்விளக்காய் . . .

ஆனந்தம் ஊற்றெடுக்கும்
ஆற்றுபடுகையாய் . . .

ஆசையில் எழுந்துயரும்
ஆழிப்பேரலையாய் . .

ஆணவத்தின் கால்விழுந்த
அடிமையாய் . . .

ஆளுமை வீற்றிருக்கும்
ஆட்சி பீடமாய் . .

இரக்கமது சுரந்திடும்
கேணியாய் . .

ஈகையை அள்ளிமோர்க்கும்
ஏற்றமாய் . . .

கவலையை கட்டிவைக்கும்
கல்தூணாய் . . .

கலக்கத்தினை உடைத்தெறியும்
கல் உளியாய் . .

சக்தியது சஞ்சரிக்கும்
சாளரமாய் . . .

சாந்தத்தை கவர்ந்திழுக்கும்
காந்தமாய் . .

கர்வத்தினை அடைகாக்கும்
பெட்டகமாய் . . .

காமத்தின் உருகொடுக்கும்
கருவறையாய் . .

மேலும்

மனதின் நிலை எத்தனை வகை 06-Jun-2017 4:54 pm
முரன்பாட்டின் முழு வடிவம் மனம்.. அருமை, பண்பினை முழக்கமிடும் பறையாய்.. நல்லா இருக்கே... வாழ்த்துகள் 12-May-2017 7:49 pm
நன்று . அருமை..... ஓ மனமே அன்பினால் நிறைந்துவிடு அகிலத்திற்கு மகிழ்ச்சிகொடு . . . .. 12-May-2017 6:11 pm
K ARULVEL - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 8:05 pm

அழுகை

இயலாமையின்
குழந்தை. . .

குழந்தைகளின்
நம்பிக்கை

ஆண்களுக்கு
அவமானம். . .

பெண்களுக்கு
ஆயுதம்.. .

நட்புடனே
பரிகாசம் . . .

அன்பின்
ஆனந்த ஊற்று

இழப்புகளின்
அடையாளம் . .

ஏக்கத்தின்
விழி அருவி. . .

மன அழுத்தத்தின்
வடிகால் . . .

வலிகளின்
விழிமொழி . .

சோகத்தின்
சுனைநீர் . . .

மேலும்

K ARULVEL - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 7:45 pm

பிரிவு


நம்மோடு இருக்கும்வரை
யாருமில்லை நம்முடனே. . .

உறவு மலர்கள்
உதிர்ந்த பின்னே
தனிமைக் காம்புகளாய் . . .

தனிமைத் தழுவல்களில்
நினைவுகள் உயிர்த்திருக்க
பிரிவு என்னாளும்
நமைத் தீண்ட முடியாது.

மேலும்

K ARULVEL - S UMADEVI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2017 7:17 pm

உறவே உன் பிரிவால்

பெண்ணே
நீ இலா இருப்பிடமோ
நள்ளிரவு கட்டி வைத்த
காரிருள் கோட்டையாகிறதே!

கண்ணின் பார்வையோ
காணும் இடமெலாம்
வெறுமைக் கோலமிட
புள்ளிவைத்துச் செல்கிறதே!

நின் குரல் தேடும் என் செவியோ
காலவரையற்ற
கதவடைப்புச் செய்கிறதே!

வாய்மொழி வார்த்தைகளோ
அர்த்தத்தை சுமை இறக்கிவைத்து
அனிச்சையாய் ஏதோ பிதற்றுகிறதே!

கீறலுண்ட இதயமோ
பஞ்சம் பூத்த பூமி கொண்ட
பாலை விரிசல் காண்கிறதே!

நீரறியா தொண்டைக்குழியோ
எச்சிலை தேக்கிவைக்க
பெரும் பள்ளம் தோண்டப் பார்க்கிறதே!

வயிற்றுப் பள்ளமதோ
வெறும் காற்றால்
விரிந்து சுருங்கும்
பலூனாகி அதிர்கிறதே!

உன் பிரிவுத்தீயில்
தீய்ந்த மனதோ

மேலும்

சூப்பர் ... 06-Jun-2017 7:46 pm
உடனின்றி போனாலும் உணர்வாலே உயிர்த்திருந்தால் பிரிவு நமை பின்தொடரா. . . 09-May-2017 7:30 pm
K ARULVEL - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2017 7:49 pm

ஓவியம்

கண்கள் காட்டும்
காவியம் . ..

உள்ளத்தின்
பிம்பம். .

ஓசையிலா
தகவல் தொடர்பு . .

சிந்தனையில்
கருவாகி
திருவாக
உருவாகும்
வண்ணங்களின்
பிரசவம்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே