மனமே நீ
 
 
            	    
                மனமே நீ . . . . 
சிலநேரம் 
அன்பின் திரியிட்ட
 அகல்விளக்காய் . . .
ஆனந்தம் ஊற்றெடுக்கும் 
ஆற்றுபடுகையாய் . . .
ஆசையில் எழுந்துயரும்
ஆழிப்பேரலையாய் . . 
ஆணவத்தின் கால்விழுந்த
அடிமையாய் . . .
ஆளுமை வீற்றிருக்கும்
ஆட்சி பீடமாய் . . 
இரக்கமது சுரந்திடும்
கேணியாய் . . 
ஈகையை அள்ளிமோர்க்கும்
ஏற்றமாய் . . . 
கவலையை கட்டிவைக்கும் 
கல்தூணாய் . . .
கலக்கத்தினை உடைத்தெறியும்
கல் உளியாய் . . 
சக்தியது சஞ்சரிக்கும்
சாளரமாய் . . .
சாந்தத்தை கவர்ந்திழுக்கும்
காந்தமாய் . . 
கர்வத்தினை அடைகாக்கும்
பெட்டகமாய் . . . 
காமத்தின் உருகொடுக்கும்
கருவறையாய் . . 
பண்பினை முழக்கமிடும் 
பறையாய் . ..
பாசத்திற்கே படிப்பூட்டும்
பண்டிதனாய் . . .
பரிவை பீறிட்டிடும்
சுனையாய் . . .
துணிவை தேக்கிவைக்கும்
அணையாய் . . .
வெறுமை கட்டிவைத்த 
கோட்டையாய் . . 
வேட்கையை மட்டுப்படுத்தும்
தணிப்பானாய் . . .
கோபத்தீயின் கொளுந்துவிட்ட
குண்டமாய் . . 
குரோதத்தை மூடிவைத்த
புதைகுழியாய் . . 
பொறுமைக்கு வீசிவிடும்
சாமரமாய் . . 
பொறாமையை தூண்டிவிடும்
தூபமாய் . . 
புலன்களுக்கு அடங்காது
புலன்களை அடக்கிவைக்கும
ஓரிடத்தே நில்லாது
சலனமுற்ற நதியாய்
ஒ மனமே . . 
                    சு.உமாதேவி
 
                     
	    
                

 
                                