வாழ்வை வென்றிடு

கனவுகள் இம்மண்ணின் மேல் நிஜமாகும் வரை
கண்களுக்குள் தூக்கம் வேண்டாம்க

சிகரம் தொட செருப்பின்றி ஓடும் கால்களுக்கு
முட்கள் இல்லா பூப்பதை வேண்டாம்

சுகம் தந்த காற்றும் இன்று உனக்கு சுமையாகி போகும்
எதிர் வரும் காற்று தடை ஆனால் திரைபோல் கிழித்து ஓடு...
கடலை கடைந்தெனும் திரவியம் தேடு

வார்த்தைகள் வலிகளை அழித்தால் ...
உன் வலிகளை சரித்திரத்தின் வார்த்தைகளாய் மாற்று

முடியாது yentraal நீ பிறவாமலையே இருந்திருக்கலாம்
முயன்று பார் muyanta செயலை முடித்து பார் ..

வெற்றி மாலை உன் கழுத்தை முத்தமிடும் நாள்
கடந்து வந்த பாதையை திரும்பி பார் ..

கண்கள் கலங்க உதடுகள் சிரிக்க
அங்கே கற்கள் மேல் படிந்த உன் ரத்தத்தை பார்

உனக்கு மட்டும் தெரிந்த பாதையை
உன் சுயசரிதையில் உலகிற்கு வெளிச்சமிட்டு

தொலைவில் இல்லை வானம் உனக்கு பூமியாகும் நாள்

அன்று ........

பெருமிதத்துடன் கொண்டாடு அதுவே உன் பிறந்தநாளென்று

எழுதியவர் : ஐஸ்வர்யா Rajagopal (12-May-17, 5:18 pm)
Tanglish : vaazhavai venridu
பார்வை : 120

மேலே