உழவனின் இறுதி கடிதம்

என் வேர்வையே வயலாக்கி
நான் வளர்த்த என்நெற் குழந்தைகளை
உங்களை விளைவிக்க உடலில்
வலிமை இருக்கிறது
நீங்கள் மடிவதை காணும் மனவலிமை இல்லை என்னிடம்.....
வாடிப் போக காத்திருக்கும்
உங்களுக்கு முன் நான் மடிந்து விடுகிறேன் மன்னித்து விடுங்கள்......

என்னை பெற்றவள் களைஎடுக்க
செல்கையில் உன் கையில் தொட்டில் கட்டி உறங்க வைத்து செல்வாள்
உன் இலைகள் பாடிய தாலாட்டுகளை என்னை உறங்க வைக்கும்
நான் சுவாசிக்க உனது மூச்சுக்காற்றை கொடுத்த
வேம்பு மரமே விடை கொடு...........

கிழவன் களைப்பாய்
இருந்தால் இளைப்பாறிப் படுக்க கீற்று பாயும்,தாகம் தணிக்க தலை நீரும் கொடுத்த என் தென்னை மரமே இந்த உழவனுக்கு விடை கொடு.....

இந்த கிழவன் வீட்டில் அடுப்பெரிய
விரல்களை விறகாய் கொடுத்த
வேலி மரமே விடை பெறுகிறேன்......

காளை மாடு விற்கப்பட்டதால்
வேலை இழந்து கிடக்கும் என் ஏர் கலப்பையே

கொய்யா மரமே கோவைபழக் கொடிகளே கருவேப்பிலைச் செடியை கரையில் இருக்கும் கருவேல மரமே
இறுதியாய் ஒருமுறை உங்களிடம் கைகுலுக்கி கொள்கிறேன்......

மஞ்சள் நிற பழங்களை மதிய உணவாய் கொடுத்து வந்து
இன்று காய்ந்து நிற்கும் என் மாமரமே பப்பாளி மரமே உங்களை உயிர்பிழைக்க வைக்க முடியவில்லை மன்னித்து கொள்ளுங்கள்.......

ஆவாரஞ் செடி அருகில் இருக்கும் இலந்தைப்பழ செடியை உன்னை என் பேத்திக்கு ரெம்ப பிடிக்கும்
உன்னிடம் ஒரு சிறு வேண்டுகோள்
அவள் உன் அருகில் வந்தாள்
உன் முட்களை உள்வாங்கி கொள் வலி தாங்கமாட்டால் என் பேத்தி.....

நெல்லு முதல் எள்ளு
வரை உன் தேகத்தை கீறியே பயிரிட்டேன்
என் தாய்
மடியில் சுமந்தால் நீயோ இத்தனை வருடம் உன் மார்பில் சுமந்தாய்
என் நிலமே உன் மகனே உன்னுடன் அணைத்து கொள்....
என் நிலத் தாயை என் மக்கள் என்னை பிரிந்து துயர்ப்பட்டால் ஆறுதல் கூறு.........

பூச்சி மருந்தை குடிக்க போகும் நிலையில் அருகில் எதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.......

பதநீர் குடித்தாலும்
காப்பி கஞ்சி
என எது குடித்தாலும் என் ஓலையை பட்டை திரித்து தானே பருக்குவீர்
இப்பொது என்னை மறந்து விட்டு என்ன குடிக்கீரீர் என்று கேட்டது
இந்த கிழவன் நட்ட பனைமரம்......

அந்த பனைமரத்த கட்டியணைத்த
படியே கடைசி நிமிடங்களை கழித்தான்......

இவன் வேர்வையையும் ரத்தத்தையும் சிந்தி உருவாக்கிய உணவை உண்ட மனித இனம் கண்டுகொள்ளவில்லை இவனை......

இவன் விரட்டி யடித்திருந்தாலும்
இவன் நிலத்து தானியத்தை
உண்டு வளர்ந்த
காகமும் கருச்சான்களும்
மயிலும் மைனாவும்
மற்ற பறவைகளும் கண்ணீர் விட்டு கொண்டிருந்தன
தங்களுக்கு உணவு கொடுத்த இறைவனை இழந்த துக்கத்தில்...........


~~~பா.அழகு துரை~~~~

எழுதியவர் : பா.அழகு துரை (12-May-17, 7:46 pm)
சேர்த்தது : பாஅழகுதுரை
பார்வை : 74

மேலே