கல்லூரிக் காலம்

கல்லூரிக் காலம் . . .

காலவிருட்சத்தின் கிளையில்
மாணவப் பூக்களாய்
அமர்ந்திருந்த அந்த மூன்றாண்டு
கல்லூரி வாசம்
இன்னும் நாசிதொட்டு
மணம் வீசிக்கொண்டே . . . . .

கிளை கொழுத்து பசுந்தளை ஆட்டி
நுழைவாயில் இருமறுங்கும்
வனப்பான வரவேற்பாளராய்
மரங்கள் தன் கைகூப்பும் . . . .

சீருடையன்றி வேறுடை
அணியா நாம்
அன்றுமுதல்
வண்ணம் பல தாங்கி
மிதந்தோமே கனவுகளில் . . .

புத்தகப்பொதி இறக்கி
கைக்கு அடக்கமாய்
கையேடு சிலவற்றை
ஒய்யாரமாய் தூக்கி
நவீன நடைபயில
பூமியே புல்லரிக்க
புல்லும் குத்திட்டு நிற்குமே . .

சிறுபருக்கை தனைகூட
பகிர்ந்துண்ணும் காக்கைபோல்
உணவுதன்னை உண்டிட்ட
உறங்கா நினைவது
கண்ணோரம் படம்காட்டி
இன்னும் தன் கண்சிமிட்டும் . . . .

கடிந்துரைத்த பெற்றோரை
கண்டும் காணாது
காட்சி மூன்றும் கண்டுவிட்டு
திரையரங்கில் தவம்கிடந்த
கனாக்காலமது . . . .

வேறுபட்ட முகவரியை
மூன்றாண்டு சுமந்த நம்மை
பட்டதாரி பட்டம் சுமத்தி
புத்தம்புதிதாய் ஓர் முகவரியை
முத்திரை பதித்தது கல்லூரி . . .

பிரியும் நாளதனில
பிரியா மனததன்
கவலையில் திளைத்த
கண்ணீர் தோய்ந்த
கனத்த வார்த்தைகளை
காகிதத்தில் சுமத்தி
தாய்வீட்டு சீதனம் போல்
ஆட்டோகிராப் அதனை
அடைகாக்கின்றோம் இன்றுவரை . . .

நல்லதோ அல்லதோ
பிரிவை இனி காணாது
நட்பிற்கு தொடர்குறி இட்டு
தொடருட்டும் ந்ம் உறவு . . . . . . .
சு.உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (14-May-17, 5:20 pm)
Tanglish : KALLURIK kaalam
பார்வை : 130

மேலே