தாய் எனும் இறைவி
காதலி
கவலையின்போது
தாயாவாள்...
மனைவி
வறுமையின்போது
தாயாவாள்...
தங்கை
ஆழ் அன்பின்போது
தாயாவாள்...
அக்காள்
அக்கறையின்போது
தாயாவாள்...
தோழி
துக்கத்தின்போது
தாயாவாள்...
ஆசிரியை
கண்டிப்பின்போது
தாயாவாள்..
நம்மை
ஈன்ற
"தாயோ"
தன்
மூச்சுள்ளவரை
நம் கடவுளாவாள்...
உலக அன்னையர்கள் மற்றும்
அன்னையை மதிக்கும்
அனைவருக்கும்
அன்னையர்தின
வாழ்த்துகள் ...
-SS.KARTHIKRAJA-