வந்துவிடு சீதா
நீ வருவாய் என நானும்
நான் வருவேன் என நீயும்
நீ திறப்பாய் என நானும்
நான் திறப்பேன் என நீயும்
நம் மௌன பயணம்
நம் திருமண வாழ்க்கையை
அழித்து கொண்டிருக்கிறது
மறப்போம் மண்ணிப்போம்
என வாழ்க்கையை தொடர்வோம்
பாதைகள் வளையாமல்
பயணங்கள் இல்லை
இதயங்கள் வளையாமல்
வாழ்க்கையில்லை
பாவம் நம் குழந்தைகள்
வந்துவிடு சீதா...