அர்ஷத் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அர்ஷத்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  02-Sep-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Nov-2014
பார்த்தவர்கள்:  954
புள்ளி:  503

என்னைப் பற்றி...

அஞ்சுவதர்க்கும் அடிபனிவதர்க்கும் தகுதி உடைய இறைவனின் அடிமை

என் படைப்புகள்
அர்ஷத் செய்திகள்
அர்ஷத் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2019 9:57 pm

கணக்கு

மனக்கணக்கும்
திரு மணக்கணக்கும்
ஒன்றே
இரண்டும் தப்பாகவே
முடிகிறது சிலருக்கு

மனக்கணக்கு
கழுத்தின் கீழே போடப்படுகிறது
மணக்கணக்கு
கழுத்திலேயே போடப்படுகிறது

அங்கே ஒன்றும் ஒன்றும் இரண்டு
இங்கே ஒன்றும் ஒன்றும் மூன்று

வீரப்பன்
மனக் கணக்கு தப்பானால்
வெடிப்பதில்லை புதர் கண்ணி
வீண் அப்பன்
மணக் கணக்கு தப்பானால்
இவள் ஆகிறாள் முதிர்கன்னி

அது மனதில் அறிவோடு போடுவது
இது மனையில் அரிவையோடு
போடுவது

120 கோடி இந்திய குடிமக்களின் மொத்தக் கணக்கு
அதில்
60 கோடி குடிக்கும் மக்களின் கணக்கு

ஆண்டவன் கணக்கை
குறைசொல்பவன்
ஆள் என்பவன்
ஆண்டவன்
கணக்கை கு

மேலும்

அர்ஷத் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2019 11:16 am

தொலைத்தவனும்
தேடுகிறான்
தொலைக்காதவனும்
தேடுகிறான்
தொலைவில்
தெரிவதை
தொட்டுவிடத்
துடிக்கிறான்
நிலையான
நிம்மதியை
இடைவிடா
இன்பத்தை
ஆழ்கடல்
அமைதியை
மட்டற்ற
மகிழ்ச்சியை
அளவிலா
செல்வத்தை
நிரந்தரமிலா
வாழ்க்கையில் !

பழனி குமார்
17.01.2019

மேலும்

இருக்கலாம் உண்மைதான் மிகவும் நன்றி 18-Jan-2019 6:00 pm
மிகவும் நன்றி ஷெரிப் 18-Jan-2019 6:00 pm
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும்,,, :) 18-Jan-2019 11:42 am
தேடித்தேடி தன்னைத் தொலைத்துவிட்டான்..! அருமை கவிஞரே....! 18-Jan-2019 11:34 am
புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) Nishazam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2019 10:35 am

அவள்
வரைந்த பூக்கோலம்
தரையில்
வீற்றிருக்கும் காலம்தான்
என்
வாழ்வின் பூபாளம்

அது மாக்கோலம் அன்று
அவள் கைப் பட்டதால்
அது இந்த நூற்றாண்டின்
மா கோலம் என்று

அவள்
கோலமிடத் தெளிக்கும்
நீர்தான் இந்த ஞாலம்
சூடாவதைத் தனிக்கின்றது

அவள்
கோலமிட்டக் கரும்பு
விருந்துண்டது எறும்பு

மாவினைக் கொண்டு
கோலமிடாது
அவள் மட்டும்
பூவினைக்கொண்டு
கோலமிட்டாள்

அது கோலம் இல்லை
நான் காண
அவளை வெளியே
வரவழைக்கும் பாலம்

அவள்
பூமியின் முகம்கழுவி
பொட்டு வைப்பதுதான்
கோலம்
அதைக் காண
திரண்ட ஊர் மக்களால்
நடக்கின்றது ஊர்கோலம்

சனியன்று
அவள் வைத்த பூசணி
பூ கண்ட அந்நாள்
முழுதும் எனக்கு

மேலும்

சிறப்பான வரிகள் 28-Jun-2020 1:35 pm
நன்றி 17-Jan-2019 9:02 pm
நன்றி 17-Jan-2019 9:02 pm
ஒவ்வொரு பத்தியையும் செதுக்கி இருக்கீங்க ... மாஸ் 17-Jan-2019 5:49 pm
அர்ஷத் - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2019 10:35 am

அவள்
வரைந்த பூக்கோலம்
தரையில்
வீற்றிருக்கும் காலம்தான்
என்
வாழ்வின் பூபாளம்

அது மாக்கோலம் அன்று
அவள் கைப் பட்டதால்
அது இந்த நூற்றாண்டின்
மா கோலம் என்று

அவள்
கோலமிடத் தெளிக்கும்
நீர்தான் இந்த ஞாலம்
சூடாவதைத் தனிக்கின்றது

அவள்
கோலமிட்டக் கரும்பு
விருந்துண்டது எறும்பு

மாவினைக் கொண்டு
கோலமிடாது
அவள் மட்டும்
பூவினைக்கொண்டு
கோலமிட்டாள்

அது கோலம் இல்லை
நான் காண
அவளை வெளியே
வரவழைக்கும் பாலம்

அவள்
பூமியின் முகம்கழுவி
பொட்டு வைப்பதுதான்
கோலம்
அதைக் காண
திரண்ட ஊர் மக்களால்
நடக்கின்றது ஊர்கோலம்

சனியன்று
அவள் வைத்த பூசணி
பூ கண்ட அந்நாள்
முழுதும் எனக்கு

மேலும்

சிறப்பான வரிகள் 28-Jun-2020 1:35 pm
நன்றி 17-Jan-2019 9:02 pm
நன்றி 17-Jan-2019 9:02 pm
ஒவ்வொரு பத்தியையும் செதுக்கி இருக்கீங்க ... மாஸ் 17-Jan-2019 5:49 pm
அர்ஷத் - உமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2019 9:58 pm

வலுவில்லா விழுதைப் போன்ற
பொலிவில்லா பொழுதை
மாற்றிடும் என் கவிதை
ஊட்டிடும் புதுத்தெம்பை.!

வாட்டிடும் உன் துயரை
வான்தடம் இடம்பெயர்த்திடு..!
காட்டிடு உன் வலிமை
தேர்ந்தெடு புது வழியை..!

ஏகமாய் பல விழிகள் நீரினில்...அதை
ராகமாய் இளங்கிளிகளின் பாரினில்
மோகமாய் மாற்றிட முடிவெடு..!

தூரமே துவண்டிடும் உன் வேகத்தில்
பாரமே பயந்திடும் உன் தேகத்தில்
காரமே இனித்திடும் உன் பேச்சினில்

நேரமே நீ வா எனில் வராது...
சாளரம் அதில் மதுவின் மழைத்துளி
மயங்கினால் அது மரணத்தின் அழைத்துளி...
மாறுமே நீ மாறினால் உலகமே..!

மாறிவிடு...நீ..மாற்றிவிடு..நீ....!

மேலும்

ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழரே..! 18-Jan-2019 11:28 am
கருத்திற்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஐயா..! 18-Jan-2019 11:25 am
வாழ்வியல் தத்துவம் உலகம் வியக்கும் வண்ணம் கவிதை மலர் படைத்திடுக! கலாம் கண்ட கனவை நனவாக்கு ! ஊட்டிடு புதுத்தெம்பை.! மோகமாய் மாற்றிட முடிவெடு..! உலகமே மாற்ற ஆவண செய்வோம் படைப்புக்கு பாராட்டுக்கள் 18-Jan-2019 5:46 am
நேரமே நீ வா எனில் வராது... சாளரம் அதில் மதுவின் மழைத்துளி மயங்கினால் அது மரணத்தின் அழைத்துளி... மாறுமே நீ மாறினால் உலகமே..! அழகு ....:) 17-Jan-2019 5:45 pm
அர்ஷத் - நிவேதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2018 5:26 pm

நான் விழிக்க
உன் முகம் வேண்டும்
என் முகம் பார்க்க
உன் விழிகள் வேண்டும்
நான் நடக்க
உன் துணை வேண்டும்
என் தலை சாய்க்க
உன் மாடி வேண்டும்
இதற்கெனவே
நீ என் கை சேர வேண்டும்

மேலும்

azhagu ... thodarnthu eluthungal 04-Dec-2018 10:49 am
Lovely lovable lines 16-Nov-2018 2:03 am
அர்ஷத் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2017 1:12 pm

கொல்லும் விழி நீயெனக்கு
மெல்லும் மொழி நானுனக்கு ..
அண்டமடி நீயெனக்கு
அன்னை மடி நானுனக்கு ..
*** அகமெல்லாம் சிலிர்க்குதே
தோழி நின்றன் வாஞ்சையிலே
***எந்தாய் மொழி மெல்லுகிற
தேன்மொழியே...!!!

நிலவின் மகள் நீயெனக்கு
அணியுங் கழல் நானுனக்கு ..
சிந்தும் கவி நீயெனக்கு
ஏந்தும் புவி நானுனக்கு ..
***சொல்லுருவி கூறுமிடத்து
நெஞ்சுருகி போவதேனோ
***சிந்தையினை சிறைகொண்ட
செந்தேனே...!!!

உருவ சிலை நீயெனக்கு
பருவ மழை நானுனக்கு ..
ஆறாந் திணை நீயெனக்கு
ஆயுல் துணை நானுனக்கு ..
***நங்காய் நாணயிலே
நாடியெண் கூடுவதேன்
***உழலும் நினதன்பிலே
நெகிழ்ந்தேனே...!!!

மேலும்

அர்ஷத் - ஜெகன் ரா தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2017 5:02 pm

சுடர் விழி இடறிட சுகமே
இடர் விட உதவிட வருமே
தீண்டிட நீண்டிடும் கரமே
சேர்ந்திட ஏங்கிடும் தினமே
வீழ்ந்திட விரும்பிடும் மனமே

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே 23-Jul-2017 6:44 pm
எட்டாவது கண்டம் அவள் விழிகள் 23-Jul-2017 8:37 am
நன்றி நட்பே 01-Jul-2017 11:09 pm
அருமை.... 01-Jul-2017 9:53 pm
அர்ஷத் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2017 3:37 am

மெதுவாய் திற ; கதை சொல்லி
அமுதூட்டிக் கொண்டிருக்கலாம்
கதவிடுக்கில் ஒரு தாய் பல்லி.

குளத்தில் மீன் பிடிக்கத் தடை.
சட்டத்தை மதிக்காமல் பிடித்துண்டு
கொழுத்துவிட்டது முதலை.

தாழியில் உடைந்தது பொரிந்தது
கோழியில் அடைந்தது பொரியவில்லை
நெகிழி முட்டை.

தூரத்து இடிமுழக்கம்
திசைமாறும் விலங்குகள்
நதிக்கரையில் நாணல்.

மேல் சாதிக்காரன் மாளிகை.
தீண்டாமைத் துடைத்தும் குப்பையில்.
கீழ் சாதிக்காரன் தூரிகை.
*மெய்யன் நடராஜ்

மேலும்

சமூக அவலங்களை படம் பிடிக்கும் வலி(ரி)கள் 21-Jun-2017 3:55 am
அர்ஷத் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2017 2:17 pm

இடைவிடாது
பயணிக்கிறது
என் கவிதை வாகனம்
அதில் நீ அமர்ந்திருப்பதால்...

சோட்டா பீம் காக
காத்திருக்கும்
குழந்தையை போல காத்திருக்கிறேன்
நீ உதடு சுளிக்கும்
கணத்திற்காக....

எங்காவது
கண்ணாடி
இருந்தால் அங்கு நின்று
உன்னை ரசித்துவிட்டு தான்
செல்கிறது உன் பிம்பம் கூட....

படிக்காமல் போன பரிட்சையில்
பாஸ் ஆனதுபோல இருக்கும்
நான் போடும் மொக்கைக்கு
நீ சிரிக்கும் போது ...

லட்டு விலிருந்து
ஒரு பூந்தியை
வாயில் வைக்கிறாய்
தனது இடப்பெயர்ப்பில்
எந்த மாற்றத்தையும்
உணராமலிருக்கிறது
அந்த பூந்தி...

தொலைவிலே
ஒரு ஐஸ் கிரீம் கடையை
பார்த்தேன் ..
நெருங்க நெருங்க
தான்

மேலும்

மிக்க நன்றிகள் சார்பான்... 18-Jun-2017 11:42 am
மிக அழகாக எழுதி உள்ளீர்..ரசனை உச்சம் தொடுகிறது 18-Jun-2017 4:05 am
ரசிப்பினில் மிக்க மகிழ்ச்சி 17-Jun-2017 4:38 pm
நன்றிகள் நண்பா... 17-Jun-2017 4:38 pm
அர்ஷத் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2017 11:25 am

பச்சை வண்ணம் தீட்டியவள்...

இச்சை எண்ணம் மூட்டியவள்...

அந்நிய நாட்டு அழகியே

அந்நியன் நானில்லையேடி

அருகில் வாராயோ ...!!!

மேலும்

நன்றி நட்பே...n 18-Jun-2017 11:44 am
விழிகள் செய்யும் கலகத்தில் காதலின் விதைநிலம் 18-Jun-2017 4:07 am
அர்ஷத் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2017 11:00 pm

மலர் கொண்ட பெண்மை

அழகி என்றால்

நீ அழகி அல்ல...

பேரழகி..! ! !

மேலும்

அருமை.... நன்றி ஐயா 05-Jun-2017 5:20 pm
மஞ்சள் நிறஆடை என்ன மயக்கும் பார்வை என்ன மல்லிகை கூந்தல் என்ன பூச்சர புன்னகை என்ன அருச்சிக்கவோ அர்ஷத் ஆயிரம் மலர்கள் கொண்டு ! அன்புடன்,கவின் சாரலன் 05-Jun-2017 4:20 pm
நன்றி மச்சி... 05-Jun-2017 10:14 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (187)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
சுரேஷ் சிதம்பரம்

சுரேஷ் சிதம்பரம்

பென்னகோணம், பெரம்பலூர் மா

இவர் பின்தொடர்பவர்கள் (189)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (187)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ஹஸீனா அப்துல்

ஹஸீனா அப்துல்

தென்காசி
மேலே