சின்னக் கவிதைகள்

மெதுவாய் திற ; கதை சொல்லி
அமுதூட்டிக் கொண்டிருக்கலாம்
கதவிடுக்கில் ஒரு தாய் பல்லி.

குளத்தில் மீன் பிடிக்கத் தடை.
சட்டத்தை மதிக்காமல் பிடித்துண்டு
கொழுத்துவிட்டது முதலை.

தாழியில் உடைந்தது பொரிந்தது
கோழியில் அடைந்தது பொரியவில்லை
நெகிழி முட்டை.

தூரத்து இடிமுழக்கம்
திசைமாறும் விலங்குகள்
நதிக்கரையில் நாணல்.

மேல் சாதிக்காரன் மாளிகை.
தீண்டாமைத் துடைத்தும் குப்பையில்.
கீழ் சாதிக்காரன் தூரிகை.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Jun-17, 3:37 am)
Tanglish : chinnak kavidaigal
பார்வை : 142

மேலே