உன் கண்ணீரில் கரையுதே என் காதல்

கோபத்தையும் பாசத்தையும்
சோறும் குழம்புமாய்
அள்ளி அமுதாக்கி அளித்தவளே ...
உன்னால் மட்டுமே முடியும்
ஒரே பார்வையில் கோபத்தையும்
காதலையும் கொட்டி தீர்க்க ...
விழுகின்ற மழை நீரினில்
நனைகின்ற இலை நீராய்
வழிந்தோடுகிற உன்கண்ணீரை எப்படி
துடைப்பேன் ???
உன் கண்ணீரில் கரையுதே என் காதல் ...
அழுவதாய் இருந்தால் அழு
என் முன்னால் அல்ல ; என் உடலிற்கு மட்டும் ....
******** சக்தி _ சிவா *********