சிவா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சிவா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 17-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-May-2017 |
பார்த்தவர்கள் | : 586 |
புள்ளி | : 29 |
எனது இயற்பெயர் சிவசக்தி ,கொங்கு தேசத்தின் மாம்பழ
நகரமாம் சிங்கார சேலம் மாநகரில் பிறந்து காவிரி கரையில்
துள்ளி குதித்து ...அம்மாவிற்கு முதல் குழந்தையாக பிரசவித்து ,
பள்ளி பருவமது அரசினர் மேல்நிலையிலும் ,நண்பர்களுடன் ஊர் சுற்றி ..
அப்துல் கலாம் ஐயா போல கனவு கண்டு விமான பொறியியல் பட்டம் பெற்று
விமான நிலையத்தில் இளநிலை விமானி பொறியாளராக இருக்கிறேன்
இப்பொது சிங்கார சென்னை வீதியிலே பல்சர் ல் பவனி வந்து ..
நொந்து வெந்து ...
காதலை உணர்ந்து ...
அலைபேசி அதிகம் விரும்பாமல் ..
இனி எப்போது யாரும் வேண்டாம் என
கவிதைகளை மட்டும் காதலிக்கிறேன் ..
எங்கும் கவிதைகளை கிறுக்கி வாய்த்த நான்
அவைகளை பொருக்கி
பொக்கிஷங்களாகி இங்கு வைக்கிறேன் ...
எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட சிறு
குப்பைகளை போல என் நினைவு உன்னுள்..
திருடியவள் வெளியே
திருப்பட்டவன் உள்ளே ; உன் மனச் சிறையில்
காத்திருக்கிறேன் இன்னமும் மீள
முடியாத புதை மணலை போல உன் காதலால் ....
இனி உறவுகளை போல
சந்திப்பின் சந்தோசந்தங்கள்
நமக்குள் இல்லையே...
தேங்கி நிற்கும் நீரோடையாய்
வற்றி போனது உனக்காகின என் காதலும் ...
மறு பிறப்பும் வேண்டாம்
மற்றும் வாழ்க்கையும் வேண்டாம் ...
உன் பிரிவே போதும் ..
ஓராயிரம் வலியை தந்துணர செய்தாயே ...
பூக்களை போல சிதற விடும் உன்
பார்வையின் சின்ன சின்ன சிரிப்புகள் ..
கோபங்களாகி போனதேயெனோ ...
எப்போதும் என்னை சீண்டி விளையாடி
வெறுப்பேத்தும் உன் விரல்கள்
தொட்டு உரசவே யோசிப்பது என்ன ??
மறந்து போனாலும் நம்முள் இறந்து
போகாத போய் வந்த இடங்கள்
இன்று நாம் சந்திக்கும் போதெல்லாம்
சமாதானம் சொல்லி கேட்கின்றனவே ...
அருகருகே இருந்தாலும் தொட்டு விடாத உன் நேசமும்
பட்டு விட கூடாதென என் பாசமும்
இன்று யாரோ போல அருகருகே அமர்ந்திருப்பது என்ன ?
சண்டையின் ஆரம்பமே சந்தேகம்தான் ...
முதல் சந்தேகமே நமக்குள் முடிவாகிவிட வேண்டாமே
நான் உன்னையும்
நீ என்னையும்
உணர்ந்திட வேண்டுமே நமக்குள் முதல் சண்ட
ஓடிய எனது பல்சரின்
சக்கரங்கள் அறியாது தேய்ந்தது
அது மட்டும் அல்ல: அவளால்
என் மனதும்தான் ..
ஒவொரு சிக்னல் சிவப்பு விளக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை
நான் அவளிடம் பேச அதுதான் வாய்ப்பு என ...
முன் செல்லும் வாகனத்தின்
திடீர் பிரேக்குகள் அடித்தால் என்னாகும்
என தெரியாது ; நான் பிரேக் அடித்தால்
அவள் என்னை அடிப்பாள் என ...
நொடி நேர பொழுதில்
நடுநடுவே ஓட்டி சென்றால்
நான் மட்டும் பயந்ததே இல்லை
அவள் பயப்படுவாள் என்று ...
இப்படி தொடர்ந்து சென்றாலும்
பெட்ரோல் தீர்ந்தாலும்
அவள் கோபம் மட்டும் தீரவேயில்லை ..
ஒவொரு முறையும் என்னை பார்த்து பல்சர் கேக்கிறது
உனக்கு அவள் இருக்கிற
உன்னை புழுவை போல
பார்க்கும் இந்த உலகம்
உன்னையும் வியந்து பார்க்கும் நாள்
வரும் ; பொறுமை கொள்
நீ சிறகடித்து
வானில் வண்ணமயமாய் சிரிக்கும் பொழுது ....
ஒரே ஒரு நாளாயினும் வாழ்கை
மற்றவர்களை சந்தோசமாக்கிக்கொள்ளும்
வண்ணத்து பூச்சியை போல
மாற்றி கொள்வோம் நம்மை நாமே...
உன்னை புழுவை போல
பார்க்கும் இந்த உலகம்
உன்னையும் வியந்து பார்க்கும் நாள்
வரும் ; பொறுமை கொள்
நீ சிறகடித்து
வானில் வண்ணமயமாய் சிரிக்கும் பொழுது ....
ஒரே ஒரு நாளாயினும் வாழ்கை
மற்றவர்களை சந்தோசமாக்கிக்கொள்ளும்
வண்ணத்து பூச்சியை போல
மாற்றி கொள்வோம் நம்மை நாமே...
Youtube ற்கு தமிழாக்கம் என்ன
உனக்காக காத்திருப்பேன்
நிமிடங்கள் எனக்கு
வீணாய் போவதில்லை !
மரங்கள் ,செடிகள்
கொடிகள் ,மலர்கள்
பறவைகள் ,வண்டுகள்
உன்னைப்போலவே அவைகளிலும்
சில அழகுகள் ஒளிந்து கிடப்பதை
ரசிப்பதில் நிமிடங்கள் எளிதாய்
கடந்து விடுகிறது !
ஒற்றைப் பார்வையாலே
என் இதயத்தில் சம்மணமிட்டு
அமர்ந்து கொண்டாய்
எத்தனை வலிகளை இப்போது
தாங்கிக் கொண்டு கிடக்கிறது
என்னிதயம் என்பது
உனக்குத் தெரியுமா?
உன் பார்வை வரத்து
நின்று போனதால்
இரும்பால் ஆனதல்ல என்னிதயம்
உன் சம்மட்டித் தாக்குதல்களை
தொடர்ந்து இவ்வாறு தாங்குவதற்கு
பூப் போன்று மென்மையானது
அது இப்போது மூச்சையற்று
ரணமாகிக் கிடக்கிறது
ஒருமுறையாவது வந்து விடு
உன் பார்வையை
மருந்தாகவாவது தந்து விடு
என் புண்பட்ட இதயம்
குணம் பெறக் கூடாதா?
ஆக்கம்
அஷ்றப் அலி