ஒற்றைப் பார்வையாலே
ஒற்றைப் பார்வையாலே
என் இதயத்தில் சம்மணமிட்டு
அமர்ந்து கொண்டாய்
எத்தனை வலிகளை இப்போது
தாங்கிக் கொண்டு கிடக்கிறது
என்னிதயம் என்பது
உனக்குத் தெரியுமா?
உன் பார்வை வரத்து
நின்று போனதால்
இரும்பால் ஆனதல்ல என்னிதயம்
உன் சம்மட்டித் தாக்குதல்களை
தொடர்ந்து இவ்வாறு தாங்குவதற்கு
பூப் போன்று மென்மையானது
அது இப்போது மூச்சையற்று
ரணமாகிக் கிடக்கிறது
ஒருமுறையாவது வந்து விடு
உன் பார்வையை
மருந்தாகவாவது தந்து விடு
என் புண்பட்ட இதயம்
குணம் பெறக் கூடாதா?
ஆக்கம்
அஷ்றப் அலி