நண்பன் நீயென
தோழன் என்று ஒரு உறவு இருக்க
காதல் என்றது சமூகம் ...
தோள் தட்டி நீ உறங்க வைத்தாய்
மடி தூங்க நீ கொடுத்தாய்
உன்னதமாய் உன் நட்பை என் பெற்றோரும்
என்னை உற்றோரும்
ஒரு நாளும் புரிந்து கொள்ளவே இல்லையடா ....
மேலாடை விலகினாலும்
மேற்பார்வையில் தப்பிலாதவனே
உன் ஒரு பிடி சோற்றிற்கு ஏதடா இணை ???
மண் மீது உள்ள வரை
மாசில்லாத உன் நட்பை கண்டு நான்
மயங்கி போன போதெல்லாம்
குழைந்தையை போல நேசித்தவனே ...
நமக்குள் பிரிவு வந்த போதெல்லாம்
செல்லமாய் அடித்து அரவணைக்கும்,
அன்னையடா நீ எனக்கு ....
மறு ஜென்மம் வேண்டுமே எனக்கும்
நட்பிற்காக அல்ல
மீண்டும் உன்னை தோழியாய் காதலிக்க ....