முதல் சண்டை

பூக்களை போல சிதற விடும் உன்
பார்வையின் சின்ன சின்ன சிரிப்புகள் ..
கோபங்களாகி போனதேயெனோ ...
எப்போதும் என்னை சீண்டி விளையாடி
வெறுப்பேத்தும் உன் விரல்கள்
தொட்டு உரசவே யோசிப்பது என்ன ??
மறந்து போனாலும் நம்முள் இறந்து
போகாத போய் வந்த இடங்கள்
இன்று நாம் சந்திக்கும் போதெல்லாம்
சமாதானம் சொல்லி கேட்கின்றனவே ...
அருகருகே இருந்தாலும் தொட்டு விடாத உன் நேசமும்
பட்டு விட கூடாதென என் பாசமும்
இன்று யாரோ போல அருகருகே அமர்ந்திருப்பது என்ன ?
சண்டையின் ஆரம்பமே சந்தேகம்தான் ...
முதல் சந்தேகமே நமக்குள் முடிவாகிவிட வேண்டாமே
நான் உன்னையும்
நீ என்னையும்
உணர்ந்திட வேண்டுமே நமக்குள் முதல் சண்டை

எழுதியவர் : சக்தி (5-Jul-17, 4:20 am)
சேர்த்தது : சிவா
Tanglish : muthal chandai
பார்வை : 385

மேலே