மல்லி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மல்லி |
இடம் | : பூமி |
பிறந்த தேதி | : 01-Sep-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 31 |
தனிமையில் என் தவிப்பைக் கண்டு
என் வீட்டு மொட்டைமாடி உன் முகவரி கேட்கிறது
ஆம்...என் தவிப்பின் அர்த்தம் அறிந்து
நான் தனிமையில் கேட்கும் பாடலின் வரிகள் புரிந்து
நம்மை ஒன்று சேர்த்து தன் கூடாரத்தில் வைத்து அழகு பார்த்திட
என் வீட்டு மொட்டைமாடி உன் முகவரி கேட்கிறது!!!
குறிலும் நெடிலும்
எதுகையும் மோனையும் போர் ஒன்றுக்கு ஒத்திகை பார்க்க
மல்லிகை மலர்களும் மல்லுக்கட்டத் தயாராகி
அவை எதிர் பாராது விளக்கொளி அணைக்கப்பட
இருவருக்கிடையே இருளில் மாட்டிக்கொண்டு
எதுகை மோனை இடம் மாறி
மலர்களும் விட்டுக்கொடுக்க
குறிலும் நெடிலும் மட்டும் விட்டுக்கொடுக்காது குழம்பி தவித்தன!!!!!!
கண்ணில் ஈரம்!
நெஞ்சில் பாரம்!
காதல் தூரம்!
எல்லாம் நேரம்!
குறிலும் நெடிலும்
எதுகையும் மோனையும் போர் ஒன்றுக்கு ஒத்திகை பார்க்க
மல்லிகை மலர்களும் மல்லுக்கட்டத் தயாராகி
அவை எதிர் பாராது விளக்கொளி அணைக்கப்பட
இருவருக்கிடையே இருளில் மாட்டிக்கொண்டு
எதுகை மோனை இடம் மாறி
மலர்களும் விட்டுக்கொடுக்க
குறிலும் நெடிலும் மட்டும் விட்டுக்கொடுக்காது குழம்பி தவித்தன!!!!!!
வெட்கத்தில் நெளியும் கண்களும்
பதட்டத்தில் வழியும் வியர்வையும்
எத்திசை ஓடினாலும் கள்வனின் கை
கைது செய்து அணைக்கப் பார்த்திட...
விரும்பி சிறை சென்றாள்
அவன் மார்பின் வெப்பத்தை விலங்காய்க்கொண்டு!!!!
பவுர்ணமி நிலவுபோல அவ காதல் இங்க வளர்ந்திருக்க
பிடிவாதம்பண்ணி கிரகணம் அந்த நிலவையுந்தான் மறைத்து நிற்க
அவனுக்காக அவ காத்திருக்கா
அந்த கிரகணம் முடிய எதிர் பார்த்திருக்கா !!!!
பவுர்ணமி நிலவுபோல அவ காதல் இங்க வளர்ந்திருக்க
பிடிவாதம்பண்ணி கிரகணம் அந்த நிலவையுந்தான் மறைத்து நிற்க
அவனுக்காக அவ காத்திருக்கா
அந்த கிரகணம் முடிய எதிர் பார்த்திருக்கா !!!!
என்னைப் பாதித்த நிகழ்வுகள்
நடமாடும் நதிகளாகப் பாயும்
நவரச ஹைக்கூக்கள் இவை.
1.நகைச்சுவை
-------------------
கொசுவைக் கொன்றபடியே
பக்கத்து வீட்டில் புலம்பினார்கள்
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை!
2.அழுகை
--------------
புடலங்காய் விதைத்தால்
புற்றுநோய் விளைகிறது.
ரசாயனப் பூச்சிக்கொல்லிகள்!
3.அவலம்
--------------
நான்கு கைகள் இருந்தும்
தானம் தரவில்லை.
உண்டியல் அருகே கடவுள்!
4.வியப்பு
--------------
ஆடி முடித்தவனைக் கரை சேர்க்க
ஆடிக் கொண்டே வருகின்றன
நாளைய பிணங்கள்.
5.கருணை
--------------
முன்னாள் தலைவர் சிலை,
எச்சம் போடாமல் சென்றது
நவீன காலத்துக் காக்கை.
6
பத்து மாதம் வயிற்றில் சுமந்து
பெற்ற பின்பும் மனதில் சுமந்து
என்னை சுமப்பதில் நித்தமும் சுகம் கொண்டு
தாய்மையால் வாழ்கையின் பயன் கண்டு
விழி காக்கும் இமையாக
என்னை அடை காத்த என் தாயே
உனக்கு மாறாக நான் என் செய்வேன்?
செய்வதறியா நான் நின்றேன்!
வானுலக கடவுள்களை மறுதலிதேன்
அம்மா!
என் கண் கண்ட கடவுளாக உன்னை கொண்டேன்
தாய்மை போற்றதான் நினைத்தென்
ஆனால் கடவுள் வாழ்த்து பாடி முடிக்கின்றேன்!!!!