இருட்டில் ஒரு கவிதை

குறிலும் நெடிலும்
எதுகையும் மோனையும் போர் ஒன்றுக்கு ஒத்திகை பார்க்க
மல்லிகை மலர்களும் மல்லுக்கட்டத் தயாராகி
அவை எதிர் பாராது விளக்கொளி அணைக்கப்பட
இருவருக்கிடையே இருளில் மாட்டிக்கொண்டு
எதுகை மோனை இடம் மாறி
மலர்களும் விட்டுக்கொடுக்க
குறிலும் நெடிலும் மட்டும் விட்டுக்கொடுக்காது குழம்பி தவித்தன!!!!!!