எளிய எழிலே

முழுமதி ஒளியை இருகரு விழியில் கொண்டவள்...
முதிரா மொட்டின் வடிவில் மூக்கைக் கொண்டவள்...
முகத்தில் பொன் திங்களின் வண்ணம் கொண்டவள்...
இருளின் கருமை... அதனை இமையில் கொண்டவள்...
நதியின் வளைவை உதட்டின் வரியில் கொண்டவள்...
தென்றலும் தீண்டிட ஏங்கும் கூந்தல் கொண்டவள்...
தென்கிழக்கும் கண்டிட ஏங்கும் எழிலைக் கொண்டவள்...
தெளிவான ஆணும் மயங்கிடுவான்... எளிய எழிலே!!!