எங்கே நிம்மதி
இரவின்
மௌனம் என்னை சூழ்ந்தாலும்,
உறக்கம் தூரம் போகிறது,
எண்ணங்கள் காற்றில் சுழல்கின்றன,
ஒவ்வொன்றும்
ஒரு கேள்வியாய் முடிகிறது.
மனதின் அலைகள்
அடங்காமல் ஒலிக்கின்றன,
எதிர்காலம், இறந்த காலம், இப்போது
மூன்றும் ஒன்றாய் குழம்புகின்றன.
உறக்கம் வராத இந்த இரவில்
மனதின் குழப்பம் தீர
ஒரு அமைதியை தேடுகிறேன்.
நான் தேடும் அமைதி எங்கே?
இரவின் மௌனம் கேட்கிறது,
"ஏன் இப்படி தவிக்கிறாய்?"
ஆனால் விடைகள் இல்லை,
உறக்கமில்லா இந்த இரவில்..,