ஏக்கம் தொடருதே

வெளியே சொல்லாத சோகம்
வார்த்தை சொல்லாத பாசம்
விளக்க முடியாத ஊமைகனவு
அருகில் வராதா ஏக்க உணர்வு

உரிமையில் எடுக்கலாம்
உரிமையாய் எடுக்கலாம்
உரியவர் மறுக்கையில்
உறவுதான் மரிக்குமா

சொல்ல சொல்ல தீரல
சோகம் கொஞ்சமும் மறையல
ஆதங்கம் ஏனோ குறையல
முடிவு மட்டும் கிடைக்கல

என்றோ ஒருநாள் மாறுமோ
எந்தன் குறைதான் தீருமோ
மாற்றம் மட்டுமே மாறாது
மறுபடி ஏக்கம் தொடருதே...

எழுதியவர் : ருத்ரன் (26-Feb-25, 10:24 pm)
Tanglish : aekkam thodaruthe
பார்வை : 79

மேலே