சாமி சொன்னதைச் செய்தேன்
அப்பா நீங்க செய்தது அநியாயம். நம்ம
சொத்தில் அண்ணனுக்குப் பெரும்
பகுதியைப் பிரிச்சுக் கொடுத்துட்டு
எனக்கு அநியாயம் பண்ணீட்டீங்க, அப்பா.
@@@@
என்னடா அநியாயம்? நம்ம ஊரில் உள்ள
மக்கள் எல்லாம் அவுங்க
பிரச்சனைகளுக்குத் தீர்வு கேட்டு
என்கிட்டத்தான் வருவாங்க. ஊரில்
எல்லோரும் "மாணிக்கம் ஐயாவை நம்பிப்
போனா எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளற
மாதிரி தீர்ப்பைச் சொல்லுவாறு. அவரை
நேர்மையான நியாயஸ்தர்"னு என்னைப்
பாராட்டுவாங்கடா சங்கேஷு.
@@@@@@@
அப்பா நீங்க நேர்மையான
நியாயஸ்தர்ன்னா அண்ணன்
மங்கேஷுக்கு இரண்டு கோடி ரூபாய்
மதிபுள்ள சொத்தையும் எனக்கு பத்து
இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தை
எழுதி வச்சிருப்பீங்களா?
@@@@@@
எனக்கு என் கனவில் என்ன சொன்னாரோ
அதைத்தாண்டா செய்தேன் மங்கேஷு.
சாமி கனவில் சொன்னபடி நான்
செய்யில்லன்னா அது சாமி குத்தம் ஆகி
நம்ம வாரிசுகளுக்கு ஏழு தலைமுறைக்கும்
பெரிய சாபக்கேடு ஆகிடும்டா மங்கேஷு.