மொட்டைமாடி
தனிமையில் என் தவிப்பைக் கண்டு
என் வீட்டு மொட்டைமாடி உன் முகவரி கேட்கிறது
ஆம்...என் தவிப்பின் அர்த்தம் அறிந்து
நான் தனிமையில் கேட்கும் பாடலின் வரிகள் புரிந்து
நம்மை ஒன்று சேர்த்து தன் கூடாரத்தில் வைத்து அழகு பார்த்திட
என் வீட்டு மொட்டைமாடி உன் முகவரி கேட்கிறது!!!