கலில் கிப்ரான் கவிதைகள் ---------ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன கவிதை -

நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர், போவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அவரெல்லாம் காதல் என்பது மனிதருக்கு நம்பிக்கையும், மன வேதனையும் தருவது என்று சொல்லி அதை ஒரு மர்மம்தான் என்று குறிப்பிட்டு முந்தைய கருத்தையே வலியுறுத்தி விட்டுச் சென்றார்.

கலில் கிப்ரான்.

காதல் என்பது என்ன ?

காதலின் மர்மம் என்ன ?
காதலின் மகத்துவம் என்ன வென்று
கோயில் முன்னின்று கேட்டேன்.
“ஆதி முதல்வன்
அளித்த ஓர் இயல்புப்
பலவீனம்” என்றார் சான்றோர்
ஒருவர்
“கடந்த காலத்தையும்
வருங் காலத்தையும்
ஒருங்கே பிணைப்பது காதல்”, என்பான்
வாலிபன் ஒருவன் !
“கரு விரியன் தீண்டி
மரணம் தரும் விஷம்,” என்றாள்
--------------------

“காலை மணமகள்
கையில் தரும்
ஒயின் மதுபானம் காதல் !
உறுதி அளிக்கும்
வலுத்த ஆத்மாக் களுக்கு !
விண்மீன்கள் கொட்டிக் கிடக்கும்
விண் வெளிக்கு ஏற்றி விடும்.”
என்று விளக்குவாள்
கண்ணழகி ஒருத்தி
புன்னகை யோடு !
கண்மூடிவாலிபம் துவங்கி முடிக்கும்
போலி நடிப்பே காதல்,” என்று
கேலி செய்வான்
காவி உடை போர்த்திய
தாடிக்காரன் ஒருவன் !

-------------
“கடவுள் நோக்கும் அளவு
மனிதனைக்
காண வைக்கும் தெய்வ உணர்வே
காதல்,” என்பான்
அடுத்தோர் ஆடவன் !
“ஆத்மா வுக்கு
வாழும் ரகசியம் தெளிவா வதை
அரணாக்கிக் கண்களை
மிரள வைக்கும்
மூடுபனிப் படலம்,” என்பான்
ஒரு குருடன் !
“ஆத்மாவின்
எரியும் உட்கருவில் சிதறும்
ஒரு மந்திரக் கதிர் !
காதல் ஒளியூட்டு வது
சூழ்ந்துள்ள மாந்தர்க்கு !
அடுத்தடுத்து வரும்
வாழ்வைவனப்புக் கனவெனக் காட்டும்
காதல் !” என்பான்
வாத்தியக் கருவி
வித்துவான் ஒருவன் !


சி. ஜெயபாரதன், கனடா

எழுதியவர் : (6-Jun-18, 8:49 pm)
பார்வை : 74

மேலே