அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
பத்து மாதம் வயிற்றில் சுமந்து
பெற்ற பின்பும் மனதில் சுமந்து
என்னை சுமப்பதில் நித்தமும் சுகம் கொண்டு
தாய்மையால் வாழ்கையின் பயன் கண்டு
விழி காக்கும் இமையாக
என்னை அடை காத்த என் தாயே
உனக்கு மாறாக நான் என் செய்வேன்?
செய்வதறியா நான் நின்றேன்!
வானுலக கடவுள்களை மறுதலிதேன்
அம்மா!
என் கண் கண்ட கடவுளாக உன்னை கொண்டேன்
தாய்மை போற்றதான் நினைத்தென்
ஆனால் கடவுள் வாழ்த்து பாடி முடிக்கின்றேன்!!!!