நான் ஒரு பெரியார்வாதி
பக்தர்களுக்கு சில கேள்விகள்..
தவறான வழியில் சேர்த்த கருப்பு பணத்தை..
உண்டியலில் போடும் புதிசாலிகளே.
அதை வாங்கி கொண்டு தான் ...இறைவன் உங்களை காபற்றுகிறாரா ??
அர்ச்சனை செய்யக் காசு...
தரிசனதிர்க்குக் காசு...
உண்டியலிலும் காசு..
இப்படி ஒரு வணிகதலத்தில் தான் இறைவன் குடி இருக்கிறாரா ??
காசு இல்லாதவன் இறைவனை அடையும் தகுதி இழந்தவனா ??
ஏழைகளின் ஜனனம் ..
சுனாமி ..
குண்டு வெடிப்பு..இவை எல்லாம் இறைவனின் திருவிளையாடல் என்கிறீர்களே..
மனிதன் பிறர்க்கு துன்பம் விளைவித்தால் தவறு ...
அதையே கடவுள் செய்தால் திருவிளையாடலா ??
மனிதனின் வெற்றிக்கு கடவுள் காரணம் ..
ஆனால் அவன் செய்யும் தவறுகளுக்கு மட்டும் அவனே பொறுப்பை ஏற்றுகொள்ள வேண்டுமா ??
ஒரு உலகத்தை காப்பாற்ற ஆயிரம் கடவுள்களா ??
உலகத்திற்கு ஒரே கடவுள் என்று சொன்னால் உலக மக்கள் அணைவர் கண்ணிற்கும் அவன் ஒருவன் மட்டும் தானே தெரியவேண்டும் ...
என் நாட்டிற்க்கு ஒரு கடவுள் ??
மனிதன் தோன்றி இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது..
இருந்தும்
உலகத்தில் பரஸ்பர அமைதியும் உண்மையும் சாத்தியபடவில்லையே ...
கடைசி மனிதன் ஒருவன் உயிரோடு இருந்தால்
அவனிடமாவது கடவுள் பதில் சொல்வாரா ??