காலைப்பொழுது
![](https://eluthu.com/images/loading.gif)
உலாவி வரும்
பனிக்குமிளி
தடவி வரும் தென்றல்
உரோமங்கள் நிமிர்த்தி
என்னை சிலிர்க்க
வைக்கும்
ஒரு கணம்
பனிக்குமிளிகளுக்கு
வர்ணம்
தீட்டி பல வண்ணம்
காட்டும்
சூரியன்
குளிரில் படுத்திருக்கும்
இலைகளை தடவி விடும்
உற்சாகமூட்டி
குளிரை ஏந்தி ஈரமாய்
வரும்
தென்றல் தழுவிச்செல்லும்
பசுமையான சிலிர்புகளுக்குள்
புது ரோஜாவாய் மலர்ந்து
என்னை மேலும்
சிலிர்க்கவைக்கும் உன்
நினைவுகள் மலரும்
காலைப்பொழுது
என்றும் சொர்க்கம்
எனக்கு