காதல்

கண்ணாடி துகள்களாய்
விழும் பனித்துளி
போர்த்திப்போகும்
தென்றல்
குளிரையும் பூசி விட்டுப்
போகும்
சூரியன் தன் மழலைக்
கரங்கள் நீட்டும்
காலைப்பொழுதுகளில்
ரோஜாவாய் மலரும்
நினைவுகளில் பனித்துளியாய்
என்றும்
காதல்