மானினம்

மானினம்

புள்ளி இல்லாத மான்
புன்னகை பூக்கும் மான்
கள்ளச் சிரிப்பு மான்
கண்களில் காதல்
செய்யும் மான்
கானலில் நம்மை
மிதக்க விட்டுவிட்டு
டாட்டா காட்டிடும்
கள்ளச் சிரிப்பு மான்
புன்னகை பூக்கும் மான்
புள்ளி இல்லாத மான் !

இந்த மானினத்தை புரிந்ததா ?

மான் கானலை நீரென்று ஏமாறும்.
நீ மானைத் தொடர்ந்தால்
மானே கானல் நீரென்று புரியும் .

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (12-Jan-14, 7:18 pm)
பார்வை : 756

மேலே