மனசாட்சி
மனசாட்சி
நீதிக்கு தலைவணங்க
தண்டாவாள கம்பி
டிக்கட் தரவேண்டுமா…….
ஒரு வழிப் பயணம்
உறுதியாக இருக்க !
படித்த சட்டம்
ஒன்றே
ஆனால் கடுதாசு காசுக்கு
போர்த்தும் கருப்புத் துணி
சூரையாடும் நடு நிலையை
கண் மூடி !
அணித்த உள் ஆடை
வெள்ளை கரை படாமலிருக்க !
மனசாட்சி
மரண வேதனை
வேண்டுவது கிடையா
மாறாக
மனவருத்தம் கிட்டும்
மறு வண்டி
எதிர் பிலாட்பாரத்தில்
புது வரவுகளை அரவணைக்க
போக வேண்டியது
பயணியில்லை
புகைவண்டி !
சரி பார்க்கவும்
சாட்சிகளை
கண் கட்டி !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
