எனக்குத் தோன்றியது என்னுள் தோண்டியது
"காசு வாங்க கடன் வாங்கலாம்
காது கேட்க கதையைக் கேட்கலாமா ?
மனசு வலிக்க சுமையை இழுக்கலாம்
மாற்றம் கேட்க ஏமாற்றம் கிடைக்குதா ?
காதல் வரும் காற்றில் வரும்
உண்மையில் வந்து உறவாகுமா?
கோடி வரும் தேடி வரும்
குணம் காக்க பணம் வீணாகுமா?
சொந்தம் வரும் தள்ளி வரும்
செல்வம் இன்றி கை கொடுக்குமா?
வாழ்வு வரும் வாழும் வரம்
நான் நன்றி சொல்ல என் வாயை அடைக்குமா?
கேள்விபட்டேன் கேலிபட்டேன்
அட அத்தனைக்கும் வாழ்வில் அடி உதை கிடைக்கும்".