முந்தானை தன்னில் மகிழ்ந்தாடி

முந்தானை தன்னில் மகிழ்ந்தாடி கூந்தலிலும்
சொந்தம்கொண் டாடும்பூந் தென்றல் இளங்காற்றே
வேறெந்த வேலையு மேயில்லை யாஉனக்கு
கூறுபூந்தோட் டம்வாடு தே
----இரு விகற்ப இன்னிசை வெண்பா
முந்தானை தன்னில் மகிழ்ந்தாடி கூந்தலிலும்
சொந்தம்கொண் டாடும்பூந் தென்றலே --அந்தியில்
வேறெந்த வேலையு மேயில்லை யாஉனக்கு
கூறுபூந்தோட் டம்வாடு தே
----இரு விகற்ப நேரிசை வெண்பா