முகம்மது யாசீன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முகம்மது யாசீன் |
இடம் | : வடகரை, செங்கோட்டை தாலுகா, |
பிறந்த தேதி | : 15-May-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 177 |
புள்ளி | : 15 |
என் பெயர் முகம்மது யாசீன், சொந்த ஊர் வடகரை, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, நான் D.E.C.E முடித்திருக்கிறேன் தற்போது துபாயில் வேலை செய்து வருகிறேன்... எனக்குள் இருக்கும் சிறிய கற்பனை கதைகளையும், சில நேரம் நான் சந்திக்கும் எதார்த்தமான நிகழ்வுகள், அதானால் நான் படித்த அனுபவங்கள்.... மேலும் மக்களுக்கு நலவை தரக்கூடிய விஷயங்கள் போன்றவற்றை எழுதுவதே என் ஆசை.....
உயிரே.... உறவே..... 💜💓💙
உன் உதடுகள் பட்டு உதிர்ந்த திராட்சை
எச்சில் பட்ட தேநீர் கோப்பை
நீ ஊட்டிவிட்ட ஒரு வாய் சாதம்
கை கழுவியதும் நீட்டிய முந்தானை
கண்ணீர் துடைத்த கருணை உள்ளம்
எனக்காய் துடிக்கும் இன்னொரு இதயம்
யாவையும் நீ செய்தால் சுகம்தான்...
பசி மறக்கும் பால் விழிகள்
கருமை நிறைந்த மேகக் கூந்தல்
முத்துச்சிதரும் முதன்மை புன்னகை
பெயரை சொன்னால் மலரும் பூக்கள்
என்ன சொன்னாலும் நீயே மிகைதான்....
எனது வாழ்த்து அட்டையை எப்படி பதிவேற்றுவது ...?
Youtube ற்க்கு தமிழாக்கம் என்ன ?
Youtube ற்கு தமிழாக்கம் என்ன
வர்ணிகா என்ற பெயருக்கு அர்த்தம்
அன்போடு பார்த்து
ஆசையாய் கதைத்து
இன்பமாய் மகிழ்ந்து
ஈரல் குளிர அணைத்து
உயிரோடுயிராய் கலந்து
ஊடல் கூடி நெகிழ்ந்து
எண்ணங்களை புரிந்து
ஏக்கங்களை தீர்த்து
ஐவிரல்களும் கோர்த்து
ஒன்றோடொன்றாய் கலந்து
ஓவியமாய் ரசித்து
ஔவியம் விடுத்து....
காதலர்கள் வாழ்ந்தால் என்றென்றும் காதலர்தினமே...
ஓலை வேய்ந்த குடிசை
ஓவியமாய் அவள்
காலையின் கதிர் எழுதும்
சிவந்த ஒவியம்
கருமையின் கவிதையவள்
எழுதுகிறாள் புன்னகையில்
ஒரு வெண்மை ஓவியம் !
-----கவின் சாரலன்
அலட்சியம் வேண்டாம்......
நான் அஜ்மானுக்கு வந்து ஒருமாதம் ஆகின்றது. அலாஹ்வின் கிருபையால் நலமாக உள்ளேன்.
என்னுடைய கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரின் தாயார் இறந்துவிட்டார்கள். அதற்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது......
நண்பர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், அவரின் ஊரோ மிகவும் சிறிய கிராமம் மொத்தமே 30 க்கும் குறைவான வீடுகளே உள்ளனவாம். வீட்டில் அம்மாவைத்தவிர வேறு யாருமில்லை. தாய் மட்டும் தனியாக இருப்பதால், இன்னும் இரண்டுமாதத்தில் ஊருக்கு சென்று கல்யாணம் முடித்து மனைவியை தாய்க்கு துணையாக (...)
முடிவில்லாத பயணம்.....
இக்கரை வந்த பின்பு அக்கரை பச்சை என்று..... அறிந்தாலும் பயனில்லை.... அயல்தேசம் நமதில்லை....
வெகு சீக்கிரம் வேலை முடிந்தும்..... ஒரு முறையேனும் ஊருக்கு பேசாமல், உறக்கம் வந்ததில்லை..... உறங்கினாலும் இன்பமில்லை.....
பணம் என்ற ஒன்றை தேடி பாசத்தை தொலைத்துவிட்டேன்...... பாசத்தை பங்குபோட்டு பார்சலிலே அனுப்பிவிட்டேன்...
ராத்திரியில் உறக்கம் தொலைத்து...... உள்ளத்தில் உணர்ச்சியை மறைத்து....
ராத்திரி பகல் பாராமால் உழைத்து.....
ராத்திபை அனுப்பிவிட்டேன்.....
கடைக்குட்டியாய் ப (...)
அனுபவமே மிகச் சிறந்த ஆசான்......
கடந்தமுறை நான் மஸ்கட் செல்லும்போது, புதிய அனுபவம் (பாடம்) ஒன்று கிடைத்தது, அந்த நிகழ்வுகளை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.......
அதாவது AIR INDIA EXPRESS விமானத்தில் எனக்கு அதிகாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து மஸ்கட்டிற்கு பயணம். ஆதலால் நான் 5:30 மணிக்கு உள்ளே சென்றேன், அப்போது என்னிடம் விசா ( original copy ) ஒரிஜினல் காப்பி கேட்டார்கள், நான் சொன்னேன் அதை மஸ்கட் ஏர்போட்டில் submit செய்துவிட்டார்கள் என்றேன், அப்படியென்றால் ஒரிஜினல் விசா sub (...)