எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவமே மிகச் சிறந்த ஆசான்...... கடந்தமுறை நான் மஸ்கட்...

அனுபவமே மிகச் சிறந்த ஆசான்......

கடந்தமுறை நான் மஸ்கட் செல்லும்போது, புதிய அனுபவம் (பாடம்) ஒன்று கிடைத்தது, அந்த நிகழ்வுகளை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.......

அதாவது AIR INDIA EXPRESS விமானத்தில் எனக்கு அதிகாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து மஸ்கட்டிற்கு பயணம். ஆதலால் நான் 5:30 மணிக்கு உள்ளே சென்றேன், அப்போது என்னிடம் விசா ( original copy ) ஒரிஜினல் காப்பி கேட்டார்கள், நான் சொன்னேன் அதை மஸ்கட் ஏர்போட்டில் submit செய்துவிட்டார்கள் என்றேன், அப்படியென்றால் ஒரிஜினல் விசா submit செய்த visa submission confirmation letter எங்கே என்றார்கள்...? நான் என்னிடமில்லை என்றேன்....! அப்படி என்றால் நீங்கள் போகமுடியாது என்றார்கள், நான் ஏன் என்றேன்.....? ஒருவேளை அங்கே ஒரிஜினல் விசா submit ஆகவில்லையானால்...! உங்களை AIR INDIA EXPRESS FLIGHT ல் திருப்பி அனுப்பிவிடுவார்கள், அதனால் எங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம்....!!! எனவே visa submission confirmation letter யை மெயிலில் அனுப்ப சொல்லுங்கள் என்றார்கள்....

எனது நேரத்தை பாருங்கள் என்னுடைய மொபைலிலோ வெறும் 15 ரூபாய்தான் பாக்கி இருந்தது, Air tel நெட்வொர்கில் இந்தியாவிலிருந்து மஸ்கட்டிற்கு கால் செய்ய குறைந்தது 17 ரூபாய் இருக்க வேண்டும், உடனே பாதுகாவலர்களிடம் என் பிரச்சினைகளை சொல்லி வெளியே வந்து, காத்துக்கொண்டிருந்த நண்பரிடம் விபரத்தை சொல்லி 500 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்ய சொல்லிவிட்டு அவரிடம் மேலும் 500 ரூபாயும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன், அதற்குள் மணி 6 ஆகிவிட்டது இன்னும் அரைமணி நேரத்தில் போர்டிங் கவுன்ட்டர் குளோஸ் ஆகிவிடும்....

நண்பர் ரீ சார்ஜ் செய்ததும் உடனே மஸ்கட்டிற்கு கால் செய்தேன், இங்கு மணி 6 என்றால் மஸ்கட்டில் 4:30 அதுவும் வெள்ளிக்கிழமை அரபுநாடுகளில் விடுமுறை என்பதால் வியாழக்கிழமை இரவு எப்படியும் தூங்குவதற்கு 3 அல்லது 4 மணியாகும் எனவே அவரும் போனை எடுக்கவில்லை, 10, 15 முறை கால் செய்தபின் ஒருவழியாக எடுத்தார், நான் யாசீன் பேசுகிறேன் இப்படி ஒரு பிரச்சினை அதனால் எனக்கு visa submission confirmation letter யை என் மெயிலுக்கு அனுப்புங்கள் என்றேன், அவரோ அது அலுவலகத்தில் இருக்கிறது, அதனால் நான் Accountant கிட்ட சொல்லி அனுப்ப சொல்றேன் என்றார்....

கொஞ்ச நேரம் கழித்து மேனேஜரிடம் இருந்து கால் வந்தது போனை Accountant எடுக்கவில்லை அதனால் நான் அலுவலகத்திற்கு சென்று அனுப்பி வைக்கிறேன் இன்னும் ஒருமணி நேரத்தில் கிடைத்துவிடும் என்றார்..... எனக்கோ இன்னும் 45 நிமிடங்கள்தான் உள்ளது என்று எனது நிலைமையை சொன்னேன், உன்னுடைய விசாவை submit செய்துவிட்டேன் அதனால் அதிகாரிகளிடம் எப்படியாவது பேசி வந்துவிடு என்று சொல்லி அவரும் போனை வைத்துவிட்டார்......

எனக்கோ ஒரே டென்ஷன் ஓகே என்ன செய்வது பேசிப்பார்ப்போம் என்று அங்கிருந்த ஒரு அதிகாரியிடம் பேசினேன், அவர் ஒரு மலையாளி என்பதால் மலையாளத்தில் பேசினேன்,( சார் ஞான் ஆத்தியம் மஸ்கட்டிர்க்கு போகுந்திள்ள, இதுன முன்பு 7 கொல்லம் ஞான் அவட இருந்துட்டுண்டு எனக்கி ஓரப்பாயிட்டு அறியான் சார்... அவட விசா சப்மிட் செய்துட்டுண்டு) என்றேன்.... அதாவது நான் புதியதாகபோகும் நபரில்லை இதற்கு முன்பு 7 வருடம் நான் மஸ்கட்டில் இருந்திருக்கிறேன், அதனால் கண்டிப்பாக எனக்கு தெரியும் சார் அங்கே என்னுடைய விசா சப்மிட் செய்திருக்கிறார்கள் என்றேன், அவரும் எனக்கொரு பிரஸ்னம் இல்லா நம்மோட சீனியர் ஆபீசெரிடத்து சம்சாரிச்சோன்னு என்னை ஒரு ஹிந்திக்காரனிடம் அனுப்பி வைத்தார்....

அவரோ ( கியா ப்ராப்ளம் யார் ) என்றார் அவரிடமும் ( சார் மேராபாஸ் ஒரிஜினல் விசா நஹி சார்... ஓர் விசா visa submission confirmation letter பி நஹி, சார் லேகின் மேரா ஆத்மி மஸ்கட்மெ ஜரூர் சப்மிட் கியா உஸ்கு அபி கால் கியா... ஓ போல்றே லெட்டெர் பேஜ்னெகேலியெ ஓர் ஏக்கண்டா ஓஜாயகா அய்சா போல்றே..... ஏ பிராப்ளம் சார்) என்று சொல்லிவிட்டு மலையாளி அதிகாரியிடம் சொன்ன என்னுடைய ஸ்டோரியை இவரிடமும் சொன்னேன்....passport ஐ வாங்கி நன்றாக செக் செய்தார், அதன்பின் நான் சொன்னதை நம்பி ஒருவழியாக சம்மதித்து அனுப்பினார் அந்த நல்ல மனிதர், வேகமாக சென்று போர்டிங்கை முடித்துவிட்டு எனக்காக காத்துகொண்டிருந்த நண்பனிடம் கை காட்டிவிட்டு நிற்ககூட நேரமில்லாமல் ஓடினேன்....

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்.....? புதியதாக வெளிநாடு செல்லக்கூடியவர்கள் கொஞ்சம் கவனமுடன் இருங்கள், எனக்கு ஹிந்தி, மலையாளம் தெரிந்ததால் ஓரளவு பேசி சமாளித்துவிட்டேன்.... நானும் புதியதாக செல்பவராய் இருந்தால் 18000 ரூபாய் எனக்கு நஷ்டமாகியிருக்கும்......

சவூதி அரேபியா நாட்டிற்கு செல்லும்போது இந்த பிரச்சினை இல்லை, ஏன் என்றால் passport ல் விசா ஏறிவிடும், மற்ற அரபுநாடுகளுக்கு செல்லும்போது புதியவர்களாக இருந்தாலும், அல்லது ஒரு கம்பெனியை கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு வந்து புதிய விசாவில் செல்பவராக இருந்தாலும், இந்த விசயங்களை கடைபிடியுங்கள் முக்கியமாக ஒரிஜினல் விசா உங்களிடம் இருந்தால் பிரச்சினையில்லை, இல்லை என்றால் உங்கள் visa submission confirmation letter யை மெயிலுக்கு அனுப்ப சொல்லுங்கள். Airport செல்லும்போது அதை ஒரு காப்பி எடுத்து செல்லுங்கள், ஏன் என்றால் நாம் எத்தனை முறை வெளிநாடு சென்று வந்தாலும் நமக்கிருக்கும் பிரச்சினைகளிலும், டென்சனிலும், முக்கியமான விசயங்களை மறந்துவிடுவோம், எனவே எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நீங்கள் பாடமாக எடுத்து, நான் மேற்குறிப்பிட்ட விசயங்களை மனதில் பதிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.......

நாள் : 19-Jul-15, 11:31 am

மேலே