எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முடிவில்லாத பயணம்..... இக்கரை வந்த பின்பு அக்கரை பச்சை...

முடிவில்லாத பயணம்.....


இக்கரை வந்த பின்பு அக்கரை பச்சை என்று..... அறிந்தாலும் பயனில்லை.... அயல்தேசம் நமதில்லை....
வெகு சீக்கிரம் வேலை முடிந்தும்..... ஒரு முறையேனும் ஊருக்கு பேசாமல், உறக்கம் வந்ததில்லை..... உறங்கினாலும் இன்பமில்லை.....
பணம் என்ற ஒன்றை தேடி பாசத்தை தொலைத்துவிட்டேன்...... பாசத்தை பங்குபோட்டு பார்சலிலே அனுப்பிவிட்டேன்...
ராத்திரியில் உறக்கம் தொலைத்து...... உள்ளத்தில் உணர்ச்சியை மறைத்து....
ராத்திரி பகல் பாராமால் உழைத்து.....
ராத்திபை அனுப்பிவிட்டேன்.....
கடைக்குட்டியாய் பிறந்த எனக்கு கண்ணீரே வந்ததில்லை.... காரணமே இல்லாமல் கைநீட்டும் காட்டரபியை, கேட்க இங்கே நாதி இல்லை....
சந்தோசமாய் நீங்களிருந்தால்
சுட்டெரிக்கும் வெயிலும் சுகம்தான்.....
நடுங்க வைக்கும் குளிரும் இதம்தான்...
கல்யாணம் முடித்துவிட்டேன், காரை வீடும் கட்டிவிட்டேன்.... கடன் இன்னும் முடியவில்லை.... காரணமும் தெரியவில்லை....
சந்தூக்கில் போகும் வரை..... சவூதி வாழ்க்கை முடியாது..... சத்தமிட்டு சொன்னாலும் சந்ததிக்கு புரியாது.......

நாள் : 19-Jul-15, 11:29 am

மேலே