குமுறல்
குமுறல்
27 / 07 / 2025
பால்வெளியில் உலாவரும் சூரியனும்
பாலெனவே குளிரூட்டும் தேன்நிலவும்
தேகம் தழுவும் தெக்கத்தி காற்றும்
'மா' கொடையாய் நீர்வார்க்கும் வான்மழையும்
மிதிப்பட்டாலும் நமைதாங்கும் இப்பூமி பந்தும்
எதிர்பாத்தா எதையும் செய்கின்றன?
ஈனப்பிறவி மனிதன் மட்டும்தான்
ஒவ்வொன்றிற்கும் பலன் எதிர்பார்க்கிறான்.
கிடைக்கவில்லை என்றால் புழுங்கிச் சாகிறான்.
இயற்கையை கண்டும் பாடம் படிக்கவில்லை
இயற்கையை வென்றிட வன்மம் குறையவில்லை
செயற்கையில் வாழ்வினை முழுக்கி விட்டான்
செயற்கையாய் வாழ்ந்து முடங்கி விட்டான்.

