பன்னீரின் மணம் கொண்டு கண்ணீரும் மணக்குதடா!!!
துரத்தி வரும் துன்பமெல்லாம் துடி துடித்துப் பறக்குதடா!!!
பாவமென்ற நோய், நொடிகள் படையெடுத்து வருகையிலே;
பற்றிக் கொண்டு எரியுதடி அவன் திருவடியைப் பணிகையிலே!!!
விளைவித்த வினைகளுக்கு விடைத் தருவான் வடிவேலன்!!!
காலம் கொஞ்சம் காத்திருந்தால் காட்சி தருவான் கதிர்வேலன்!!!
ஓம் என்ற ஒரு வார்த்தை உலகெங்கும் ஒலிக்குதடி!!!
ஓம் என்று ஒலிக்கையிலே கனவெல்லாம் பளிக்குதடி!!!
**********************************************************************************************************************************************************************************
என் இனிய சகோதர, சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்...
**********************************************************************************************************************************************************************************
# தானம், தர்மம் செய்பவனும், அதை பெறுபவனும் மட்டுமே இறைவன் இருப்பதை உணர்கின்றனர்!
# உயர்வான குணங்கள்தான் ஒரு மனிதனை முழுமையடையச் செய்கிறது!
# காதல் அவசியம் தேவைதான் ஆனால் அது வாலிபத்திற்கு அல்ல... வாழ்க்கைக்கு!
# காதலியை/காதலனை தேடுவதைவிட தனக்கு சொந்தமாகும் துணையை நேசிப்பதே வாழ்க்கைக்கு உத்தமம்!
அப்பாவி மக்கள் அடிமைகளாக வாழும் அவலநிலை இன்றும் மாறவில்லை!
விடுதலை யாருக்கு கிடைத்தது?
மனிதனுக்கா! இல்லை... மண்ணுக்கா!
ஆங்கிலேயர் ஆட்சியில் கூட பாரதமாதா கண்ணீர் வடித்திருக்கமாட்டாள் அன்று;
ஆனால் இங்கு நடக்கும் அக்கிரமங்களை அவள் காணும்பொழுது இன்று!
அதனால்தான் சுதந்திரதினத்தன்று இனிப்பு வழங்குகிறார்களோ!
சமாதானப்படுத்த!!!!!!!!!!!
விடுதலை யாருக்கு கிடைத்தது?
ஏழைக்கா! இல்லை... ஏகாதிபதிக்கா!
இதை அறிந்தும்... அறியாத குடிமகனாய் கூட்டத்தில் நானும் நிற்கின்றேன் மிட்டாய் வாங்க!
இளமையில் மருத நிலத்தில் வாழ்ந்து மீண்டும் ஒருமுறை அந்த சொர்கத்தை திரும்பிப் பார்க்க துடிப்பவர்களுக்கும், மருத நிலத்தைக் காண விரும்புவர்களுக்கும் இக்கதையை பணிவன்புடன் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் காதல் ஒரு வித்தியாசமான அனுபவம். அது ஒரு சிலருக்கு வெற்றியில் முடிந்திருக்கும், ஒரு சிலருக்கு தோல்வியில் முடிந்திருக்கும், இன்னுமொரு சிலருக்கு பெட்டகத்தில் பூட்டிவைத்த அனுப்பப்படாத காதல் கடிதங்களைப் போல் மனதில் நிரந்தர பொக்கிசங்களாக நிறை
அன்புள்ள ஐயா திரு.வ.க.கன்னியப்பன் அவர்களுக்கு வணக்கம்,
தங்களுடைய நிறைகள் இக்கதைக்கு கிடைத்த பரிசு. தாங்கள் சுட்டிக் காட்டிய குறைகள் எனது அடுத்த படைப்பின் விதை. தாங்கள் கூறியது போல் இக்கதையில் உள்ள குறைகளையும் நிறைகளாக மாற்றிவிட்டேன். அவர்கள் காத்திருக்கும் 13 ஆண்டுகளை தவிர. ஏன் என்றால்; அவர்கள் கொண்ட காதலின் ஆழத்தையும், "காதல் என்பது வாலிபத்திற்கு அல்ல வாழ்க்கைக்கு" என்ற தத்துவத்தை இக்காலத்திற்கு எடுத்துக்காட்டவும் ஆண்டுகளை குறைக்காமல் வைத்துள்ளேன் மன்னிக்கவும். ஐயாவின் பாராட்டை பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி. குறைகளை எடுத்துக் கூறி என்னை மீண்டும் புத்துணர்வு பெற செய்துவிட்டீர்கள். என்றென்றும் தங்களுடைய கருத்தை எதிர்பார்த்து எனது ஒவ்வொரு படைப்பும் காத்திருக்கும். மிக்க நன்றி ஐயா.
இவண்,
கார்த்திக் நித்தியானந்தம். 12-Jul-2015 6:37 pm
அன்புள்ள கார்த்திக்,
'மருத நிலத்தில் ஒரு காதல் கதை' வாசித்தேன். அருமையான நடையும், கருத்துக்களும் என்னை மிகவும் ஈர்த்தன. எழுத்துப் பிழைகளே இல்லாத, வடமொழிக் கலப்பும் இல்லாத ஒரு தமிழ் நடை, (ஒரு சில இடங்களில் ஒற்றுக்கள் இல்லாததும் இருப்பதும் தவிர - மேனிக் கொண்டவளே - மேனி கொண்டவளே, செடிக்கொடிகளும் - செடி கொடிகளும்).
மருதநிலக் காட்சிகளும், வாழ்க்கை முறையும் எழுதப்பட்டது கிட்டத்தட்ட பிரபல திரு.கல்கி எழுதியதைப் போல பிரமிக்க வைக்கிறது.
'சிவன் கோயிலில் மணி ஒலிக்கும் சப்தம் டிங்…டாங்…டிங்... டிங்…டாங்…டிங்... என்று பறவைகள் பாடும் கானத்திற்கு பின்னிசையாக பிணைந்து குளிர்ந்த இளம் தென்றலோடு கும்.... என்று வீசியது. (கும்.... என்று வீசியது என்பதற்குப் பதிலாக 'கணீரென்று எதிரொலித்தது என்றிருக்கலாம்)
வயலில் நடவு நடும் பெண்கள் பாடும் தெம்மாங்குதான் அது. அதற்க்கு பின்னிசையாக உழவர்கள் நெல் மணிகளை பிரிக்க நெற்கதிர்களை கயிற்றில் கட்டி கல்லில் அடிக்கும் சப்தம் டிச்...டிச்… என்று கேட்டது. (நடவு நடும் பெண்கள் என்பதற்குப் பதிலாக அறுவடை செய்யும் பெண்கள் என்றிருக்கலாம்)
தோழி நீலவேணியை பள்ளிப் பருவத்திலேயே கொண்டு வந்திருக்கலாம்.
பொழிலிடை ஆடிடும் மயில் மேனிக் கொண்டவளே;
உன் மேனி நான் தீண்ட என்ன தவம் செய்தேனோ!
மையிட்டக் கரிய உன் கடைக்கண் பார்வையிலே;
மடிந்து நான் போனாலும் மலர்ந்துவர மாட்டேனோ!! -
ஒரு அருமையான பாடல்.
இதில் கீழேயுள்ளபடி இணைத்தால் கலிவிருத்தம் என்ற அமைப்பில் வரும்.
பொழிலிடை ஆடிடும் மயில்மேனி கொண்டவளே;
உன்மேனி நான்தீண்ட என்னதவம் செய்தேனோ!
மையிட்ட கரியஉன் கடைக்கண் பார்வையிலே;
மடிந்துநான் போனாலும் மலர்ந்துவர மாட்டேனோ!!
கதையில் வருவது போல, '13 ஆண்டுகள் கடந்தன' என்றால் முதிர்கன்னியாகவும் 30 வயதைத் தாண்டியவர்களாகவும் இருக்குமே! எனவே, ஒன்றிரண்டு வருடங்கள் காத்திருப்பிற்குப் பின் 23 வயதிற்குள் திருமணத்தை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை முடித்திருக்கலாம்.
மிகுந்த பாராட்டுக்கள்.
உன்னுள் மிகுந்த திறமையும், தமிழ் மொழி வளர்ச்சியும் பொதிந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். உன் பெற்றோர்க்கும், தமிழ் ஆசிரியர்க்கும் என் வணக்கங்கள்.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்
12-Jul-2015 9:12 am
ஒவ்வொருவருடைய மனதிலும் புதைந்து கிடக்கும் பழமையான பொக்கிஷங்களை மீண்டும் ஒருமுறை மனத்திரையில் படமாக காட்ட இக்கதையை படைத்தேன் தோழா. தங்களுடைய கருத்து என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது. தாங்கள் பதிவேற்றிய கருத்திலிருந்து தெரிகிறது மருத நிலத்தில் கலந்துவிட்டீரென்று. மிக்க நன்றி திரு.முகம்மது சர்பான் அவர்களே. 12-Jul-2015 3:50 am
உன்னை சிரிக்கச் செய்யும் தந்திரம் நான் அறியேன் என்றாலும்;
கலங்கும் உன் விழி துடைக்கும் மந்திரம் நான் அறிவேன்.
தோழனாக...!
மகனாக...!
சகோதரனாக...!
கணவனாக...!
தந்தையாக...!

ஒரு வாலிபன் அயல்நாட்டில் பணிபுரிந்துகொண்டிருகின்றான் ஒருநாள் அவனுடன் பணிபுரியும் சக ஊழியரில் ஒருவர் அவனிடம் வந்து "ஏன் சோகமாக இருக்கின்றாய்?" என்று கேட்கின்றார். அதற்க்கு அந்த வாலிபன் அவன் துறையில் உள்ள ஒரு உயரதிகாரியை காட்டி "அவரை போல் என்னால் ஆக முடியவில்லையே" என்று கூறுகின்றான். அதற்க்கு அந்த ஊழியர் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் பணிபுரியும் பல ஊழியர்களை காட்டி "உனக்கு கீழே இவர்கள் பணிபுரிகின்றார்கள்" என்று கூறுகிறார். மறுநொடி அவனது சோகம் சுகமாக மலர்கிறது!
அந்த வாலிபன் என்னுடைய மனம்!
அந்த சக ஊழியர் என்னுடைய மதி!