திருமண அழைப்பிதழ்
மண்ணோடு விதை சேர்ந்து;
மரமாக உருமாறும் செடிபோலே!
மனதோடு மனம் சேர்ந்து;
மலராகி கனியாகும் மணநாளில்!
மகத்தான வாழ்வுக்கு மாலையிட்டு;
மங்கல திலகமிடும் வேளையிலே!
மங்காத உரமென்னும் அன்போடு;
மழையாக வளம்சேர்க்க வாரீரோ...
விதையாக உருமாறும் கனிகளுக்கு!